March 10, 2017 தண்டோரா குழு
சென்னை, ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெறும் சட்டப் பேரவைக்கான இடைத்தேர்தலில், பா.ஜ.க. சார்பில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
ஜெயலலிதா மறைவை அடுத்து அவர் போட்டியிட்டு வென்ற ஆர்.கே. நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் மார்ச் 16-ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் அதிமுக கட்சியினர் சசிகலா, ஓபிஎஸ் என்று இரு அணிகளாகப் பிரிந்துள்ளனர். இதனிடையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தனியாக பேரவை அமைத்துள்ளார். எனவே, ஜெயலலிதா சார்பானவர்கள் மூன்று அணிகளாகப் பிரிந்துள்ளனர். இதன் காரணமாக, ஜெயலலிதாவுக்கான வாக்குகள் பிரியக்கூடும். இதன் விளைவாக ஏதிர்கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கருதப்படுகிறது.
இத்தொகுதியில் பா.ஜ.க., சார்பில், அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளது. மேலும், அங்கு கணிசமான அளவில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் வசிப்பதால், அந்த சமூகத்தைச் சார்ந்த தமிழசை சவுந்தர்ராஜன் போட்டியிவார் எனத் தெரிகிறது.