March 23, 2017
தண்டோரா குழு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாரையும் ஆதரிக்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் கங்கை அமரன், நடிகர் ரஜினிகாந்தை சமீபத்தில் சந்தித்தார். பா.ஜ.க வேட்பாளராக நான் தேர்வு செய்யப்பட்டதும் நடிகர் ரஜினிகாந்த் எனக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவரிடம் சந்திக்க வேண்டும் என்று கேட்டேன். அதன்படி அவரைச் சந்தித்தேன். இதனால் ரஜினிகாந்த் பாஜகவில் சேர வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில் ரஜினிகாந்த் அதை மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
“ வரும் தேர்தல்களில் எனது ஆதரவு யாருக்கும் இல்லை ” என்று கூறியுள்ளார்.