• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை வைத்து அரசியல் வேண்டுமானால் செய்யலாம் – அன்புமணி ராமதாஸ்

October 20, 2022 தண்டோரா குழு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பு தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை வைத்து அரசியல் வேண்டுமானால் செய்யலாம், அறிக்கை ப்ரொபஷனல் ஆக இல்லை , நுட்பமான விளக்கம் எதுவும் அதில் இல்லை, சட்டமன்றத்தில் எடுபடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அவருக்கு கட்சி சார்ந்த தொண்டர்கள் பலர் பூங்குத்துக் கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ்,

கோவை சார்ந்த பிரச்சினைகள் சிலவற்றையும், சட்டசபை நிகழ்வுகள் தொடர்பாகவும் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை மற்றும் அருணா ஜெகதீசன் ஆகியோர் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்தார். ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை ப்ரொபஷனல் ஆக இல்லை அதனை வைத்து அரசியல் செய்யலாம் சட்டமன்றத்திற்குள் எடுபடாது என அவர் தெரிவித்தார்.

மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை குறித்து பேசிய அவர், அந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் காவல்துறையினர் இதனை பாடமாக வைத்துக் கொண்டு கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து சட்டசபையில் அதிமுகவின் இருக்கை பிரச்னை தொடர்பான பதில் அளித்த அவர், இது கட்சி சார்ந்த பிரச்சினை மேலும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை வைத்து அதன் அடிப்படையில் சபாநாயகர் நடுநிலையாக செயல்பட வேண்டும் என பதிலளித்தார்.

கோவை மாவட்ட பிரச்சினைகள் தொடர்பாக பேசிய அவர், இந்தியாவில் உள்ள பின்னலாடை தொழில் அதிகமாக கொங்கு பகுதியில் உள்ளது. தற்போது 40% ஆர்டர் குறைந்துள்ளது. மத்திய மாநில அரசுகள் தலையிட்டு விரைந்து தொழிலை மீட்டெடுக்கவும் தொழிலாளர்களின் வாழ்வாரத்தை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

90% பணிகள் முடிந்ததாக கூறப்படும் அத்திகடவு அவிநாசி குடிநீர் திட்டம் ஏன் இன்னும் முடிக்கவில்லை என கேள்வி எழுப்பினார். பரம்பிகுளம் டேம் 12 டி எம் சி நீர் வீணாகியுள்ளது, இனி இது போன்று நடக்க கூடாது. செங்கல் சூளைகளுக்காக செம்மன் அள்ளுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை நகருக்கு கூடுதலான மருத்துவக் கல்லூரி வேண்டும். அதற்கான தேவை உள்ளது. பின்னர் தீபாவளி தினத்தன்று மது கடைகள் திறந்து வைப்பது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, மதுக்கடைகளுக்கு இலக்கவைத்து விற்பனை செய்வது விட மாணவர்கள், குழந்தைகளுக்கான கல்வி தடுப்பூசிகளுக்கு இலக்கு வைத்து அரசு செயல்பட்டால் நன்றாக இருக்கும். அத்திக்கடவு அவினாசி திட்டம் விரைவாக செயல்படுத்தவேண்டும்,

பாண்டியாரு புன்னம்புழா, நல்லாறு பாம்பாறு திட்டம் செயல்படுத்த வேண்டும்.சட்டமன்றம் 100 நாட்கள் நடக்க வேண்டும், அதிகமான விவாதம் நடத்தபட வேண்டும். போதை கலாச்சாரம் தடை செய்ய வேண்டும் போதுமான காவலர்கள் இல்லை ஆகையால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பண்டிகை காலம் என்பதால் பேருந்து கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் நிறுவன பால் விலையை குறைக்க வேண்டும் ஆவின் பால் விலையை விட தனியார் பால் விலையை உயர்த்துள்ளனர் ஒரு ஆண்டில் நாலு முறை விலை உயர்த்தபட்டுள்ளது அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றார். மேலும் கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி தற்போது ஒரு அரசு பள்ளி அறையை பாமக மாடல் பள்ளி அறையாக மாற்றியுள்ளார். அதனை தமிழக முதல்வரும் பள்ளிகல்வித்துறையும் பின் பற்றி அரசு பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார்.

இதில் கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் கோவை ராஜ், மேற்கு மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி, திருப்பூர் கோவை மாவட்ட பொருப்பாளர்கள், கட்சியினர் என பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க