May 12, 2023 தண்டோரா குழு
கோவை கணபதியில் உள்ள கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் 52 பேர் AISSCE (ஆல் இண்டியா சீனியர் ஸ்கூல் சர்டிபிகேட் தேர்வு) 2023 ஆம் ஆண்டு கிரேட் 12ம் வகுப்புக்கான தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய 52 மாணவர்களும் (100 சதவீதம்) தேர்ச்சி பெற்றனர்.இதில் 50 மாணவர்கள் 70% மதிப்பெண்களுக்கு மேலும் 9 மாணவர்கள் 90% மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனர்.
இப்பள்ளியில், மாணவர் ஹரி.ஜி 500க்கு 480 மதிப்பெண்களும், ஹர்ஷில் பாவிக் மோமயா 473 மதிப்பெண்களும் அபினவ் சுப்ரமணியன் 472 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தனர். வேதியியல் பாடத்தில் மாணவர்கள் ஹரி.ஜி, அபினவ் சுப்ரமணியன் ஆகியோர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தி உள்ளனர்.
மேலும் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல கிரேடு 10 ஆம் வகுப்பு தேர்வை கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளியில் மொத்தம் 93 மாணவர்கள் எழுதினர். அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.70 சதவீதத்துக்கு மேல் 83 மாணவர்களும், 90 சதவீதத்துக்கு மேல் 29 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பள்ளியில் தர்ஷன்.பி 500க்கு 487 மதிப்பெண்களும் திவ்யேஷ்.பி 484 மதிப்பெண்களும் சித்தார்த்.கே 483 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.கணிதத்தில் பாலா நிதின்.எம்.எஸ், தர்ஷன்.பி ஆகியோரும் செயற்கை நுண்ணறிவில் பாலா நிதின்.எம்.எஸ், தர்ஷன்.பி, ஷ்ரேயானந், சுரேஷ் கிருஷ்ணா ஆகியோரும் தமிழில் சரண் விக்னேஷ்.ஆர் மற்றும் ஆங்கிலத்தில் ஸ்நேகா.ஜெ.பி ஆகியோரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தி உள்ளனர்.
சாதனை மாணவர்களை பள்ளித் தலைவர் N.அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ், முதல்வர் பூனம் சயால் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.