March 24, 2017 தண்டோரா குழு
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் சுரங்க பாதை ஆளில்லா ரயில்களை இந்தாண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று சீனா அறிவித்துள்ளது.
இது குறித்து உள்ளூர் அதிகாரிகள் கூறுகையில்,
“சீனா பெய்ஜிங் நகரில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் சுரங்க ரயில் பாதையும் ஆளில்லா ரயில்களும் இந்தாண்டு அறிமுகப்படுத்தப்படும். நகரின் தென் மேற்கு புறநகர் பகுதியான பாங்க்ஷன் என்னும் இடத்தில் வசிக்கும் மக்களின் போக்குவரத்து வசதிக்காக 16.6 கிலோமீட்டர் யாங்பாங் ரயில்பாதை அமைக்கப்பட்டவுள்ளது” என்றார் அவர்.
பெய்ஜிங் மாநகர வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற ஊரக வளர்ச்சி ஆணைய செய்திதொடர்பாளர் கூறுகையில், “சீன பெருநிலப்பகுதியில் முதல் முழுமையாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தானியங்கி சுரங்கப்பாதை ரயில் வசதி இதுவாகும்” என்றார்.
சீனாவில் 2௦17-ம் ஆண்டின் இறுதிக்குள் நகரின் முதல் டிராம் ரயில் பாதை மற்றும் முதல் நடுத்தர குறைந்த வேக காந்த ரயில் பாதை என்று இரண்டு புதிய ரயில் பாதைகளின் கட்டுமான பணிகள் முடிவடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்போது, 574 கிலோமீட்டர்கள் உள்ளடக்கிய 19 பாதைகள் பெய்ஜிங் நகரில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.