May 23, 2017 தண்டோரா குழு
மாணவர்களை உளரீதியாக தாக்கும் மத்திய அரசு மற்றும் எய்ம்ஸ் நுழைவுத்தேர்வில் பர்தா அணிய தடை விதித்த எய்ம்ஸ் நிறுவனத்தை கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய கேம்பஸ் ஃப்ரண்ட் அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 7ம் தேதி நடைபெற்ற மருத்துவ படிப்பிற்கான NEET நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் கட்டுப்பாடு என்ற பெயரில் மாணவர்கள் பல்வேறு சோதனைக்கு ஆளாக்கப்பட்டனர். மத்திய அரசின் இத்தகுதி தேர்விற்கு பல்வேறு தரப்பினர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் வலுத்தது.இதனைத் தொடர்ந்து NEET தேர்வு பல்வேறு சர்ச்சைகளில் முடிந்தது.
இதற்கிடையில்,AIIMS நிறுவனமும் இந்திய அரசாங்கம் அளித்த அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் இஸ்லாமிய பெண்களின் பர்தா அணியத் தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனிமனித சுதந்திரத்திற்கு தடை விதிக்கும்மத்திய அரசு மற்றும் எய்ம்ஸ் நிறுவனத்தை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் அதன் மாவட்ட செயலாளர் அக்பர் தலைமையில் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.