July 29, 2017 தண்டோரா குழு
ஆஸ்திரேலிய நாட்டில் பாரம்பரிய கத்தியை வைத்து பயணம் செய்த சீக்கியர் ஒருவரை பேருந்தில் இறக்கி விடப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்ன் நகரை சேர்ந்த 20 வயது மதிக்கதக்க சீக்கியர் ஒருவர், பாரம்பரிய கத்தியை தனது வலது இடுப்பு பகுதியில் வைத்துக்கொண்டு, பேருந்து ஒன்றில் பயணம் செய்துள்ளார்.அவருடைய இடுப்பு பகுதியில் கத்தி இருப்பதை கண்ட ஒரு பயணி ஒருவர் மெல்போர்ன் நகர் காவல்துறையினருக்கு தகவல் தந்துள்ளார்.
தகவல் அறிந்த அவர்கள், விரைந்து வந்து அந்த பேருந்தை நிறுத்தியுள்ளனர். பேருந்துக்குள் நுழைந்த அதிகாரி, அந்த சீக்கியர் இளைஞனிடம் ‘கையை உயர்த்திக்கொண்டு பேருந்திலிருந்து கீழே இறங்கு என்று கட்டளையிட்டுள்ளார். அந்த இளைஞனும் மறுப்பு ஏதும் சொல்லாமல் கீழே இறங்கியுள்ளார்.
காவல்துறை அதிகாரி அந்த இளைஞனிடம் விசாரித்தபோது, ஆஸ்திரேலிய நாட்டில் சட்டப்பூர்வமான உரிமையுடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். அவர் சீக்கியர் இன மக்கள் வைத்திருக்கும் பாரம்பரிய கத்தியை தான் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் சீக்கியர் இன ஆண்கள் அவர்களுடைய மத நம்பிக்கைபடி ‘கேஷ் (நீட முடியை வெட்டாமல் இருப்பது), கிர்பன்(பாரம்பரிய கத்தி வைத்திருப்பது), கங்க(சீப்பு வைத்திருப்பது), காரா(இரும்பு காப்பு அணிந்திருப்பது) மற்றும் கச்சேரா(சிறிய பேண்ட் அணிந்திருப்பது) ஆகிய 5 எங்களிடம் இருக்கும் அதனால் தான் வைத்திருக்கிறேன் என்று கூறினார்.
இதனால் அந்த கத்தியை காவல்துறையினர் பறிமுதல் செய்யவில்லை என்றும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
1830 களில் சீக் இன மக்கள் ஆஸ்திரேலியா நாட்டில் குடிபெயர்ந்து உள்ளனர். ஆஸ்திரேலியாவில் 72.000 சீக் இன மக்கள் வாழ்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.