• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆஸ்திரேலிய கடலில் மர்ம பூச்சிகளின் அட்டகாசம்

August 9, 2017 தண்டோரா குழு

ஆஸ்திரேலியாவில் கடலில் காலை நனைத்த வாலிபனின் கால்கள் ரத்த கரையாக மாறியது மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் சேர்ந்த சாம் கணிசே என்னும் 16 வயது சிறுவன், கால்பந்து விளையாடி விட்டு, கடல் நீரில் சிறிது நேரம் தன் கால்களை வைக்க வேண்டும் என்று விரும்பினான்.
கால்பந்து விளையாடிய பிறகு தனது வீட்டின் அருகில் உள்ள கடற்கரையில் கால்களை நனைத்து விட்டு கரை திரும்பிய அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்ததது.

அவனுடைய இரண்டு கால்களிலிருந்து ரத்தம் வருவதை பார்த்தான். காலில் வலி அதிகாமாக இருப்பதை உணர்ந்து உடனே வீட்டிற்கு சென்றுள்ளான். தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளான். உடனே அவனுடைய பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவர்கள் சாமின் கால்களை பரிசோதனை செய்தனர். ஆனால், எதனால் இந்த பிரச்சனை உண்டாகியது என்று அவர்களால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

இதையடுத்து, சாமின் தந்தை இறைச்சி துண்டுகளை எடுத்துக்கொண்டு கடலுக்கு சென்றுள்ளார். அதை வைத்துக்கொண்டு சாமை கடித்தது எது என்று அறிந்துக்கொள்ள, அப்படி செய்தார். அதை காணொளியாக எடுத்தபோது, மிக சிறிய விலங்குகள் இறைச்சியை உண்பது அதில் பதிவாகியது. உடனே, அதை மருத்துவர்களிடம் காட்டியுள்ளார்.

கடலில் அழிந்த நிலையிலிருக்கும் செடி மற்றும் விலங்குகளை உண்ணும் Crustacean இனத்தை சேர்ந்த ‘ஆம்பிபோட்ஸ்’ ஆக இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், ஆம்பிபோட்ஸ் இவ்வளவு ரத்தம் வெளியேறாது என்று ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த மற்றொரு நிபுணர் தெரிவித்தார். அவை ஜெல்லி மீன்களின் குட்டியாக இருக்கலாம் என்று மற்றொரு நிபுணர் தெரிவித்தார்.

ஆக மொத்தம் அவர்கள் சொல்ல வரும் கருத்து என்னவென்றால் ‘இது போன்ற ஒரு பூச்சியை பார்த்ததே இல்லை’ என்பது தான்.

மேலும் படிக்க