June 2, 2017 தண்டோரா குழு
இசையால் மக்களின் மனதை கவர்ந்த இசைஞானி இளையராஜாவின் 74வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு அவருடைய இசையை கொண்டாடி மகிழ பிரத்யேக ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா. பல தலைமுறை மனிதர்களாக கொண்டாடும் இசையமைப்பாளராக இளையராஜா திகழ்ந்து வருகிறார்.
இளையராஜாவின் பாடல்கள் திருட்டுத் தனமாக பயன்படுத்துவதாக எழுந்த புகாரை அடுத்து, பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தினார். காப்பிரைட் சட்டப்படி தனது பாடல்களை உரிமம் பெறாமல் யாரும் விற்க முடியாத நிலையை உருவாக்கினார்.
இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் தனது பாடல்களை தடையின்றி இலவசமாக கேட்க ஒரு செயலியை உருவாக்கினார். அதற்கு மேஸ்ட்ரோ மியூசிக் என்று பெயர் வைத்துள்ளார்.இந்த ஆப் மூலம் இசைஞானியின் இசையில் உருவான பாடல்களை, ரசிகர்கள் இனி இலவசமாக கேட்கலாம்.