May 10, 2017 தண்டோரா குழு
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது;
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், திருச்சி, தஞ்சாவூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் புல்லம்பாடியில் 7 செ.மீ., மழையும், திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் 6 செ.மீ., மழையும் பெய்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும்.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும். கடலோர பகுதிகளில் வெயில் 36 முதல் 38 டிகிரி செல்சியஸ் பதிவாகும். உள்மாவட்டங்களில் 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்.”
இவ்வாறு அவர் கூறினார்.