March 9, 2023 தண்டோரா குழு
சர்வதேச மகளிர் முன்னிட்டு கோவையில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கோவை இட்லி பாட்டி கமலாத்தாள் உள்ளிட்ட 18 பெண்களுக்கு சிறந்த சாதனை பெண் எனும் விருது வழங்கப்பட்டது.
கோவை அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஹோட்டலில் சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. ‘கோயமுத்தூர் உமன் பவர் 2023’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்வி,மருத்துவம்,சமூக சேவை,மகளிர் மேம்பாடு,அழகு கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட சுமார் 18 பெண்களுக்கு விருதுகள் சழங்கி கௌரவிக்கப்பட்டது.
குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விநியோகித்து வரும் இட்லி பாட்டி கமலாத்தாள் உட்பட பலருக்கும் இந்த சாதனை பெண் விருதுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான தனியார் நிறுவன தலைவர் ஸ்மிதா பட்டேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரபல நிறுவனமான மார்ட்டின் குழும இயக்குநர் லீமா ரோஸ் டிறப்பு அழைப்பாளராக பங்கேற்று விருதுகளை வழங்கினார்.
முன்னதாக செய்தியாளர்களிடையே பேசிய லீமா ரோஸ்,
பெண்கள் எப்போதும் உயர்வானவர்கள் என்றும் அனைத்து துறைகளிலும் பெண்கள் சோதனைகளை சாதனைகளாக்கி ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பணிபுரிந்து முதல் நிலையில் உள்ளனர் என்றும் தெரிவித்தார். மேலும் சிறார்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை களைய அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு குழுக்கள் அமைக்க வேண்டும் எனவும் திருநங்கைகள் வாழ்க்கை தர மேம்பாட்டிற்காக அரசு மேலும் பல திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.