• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் கோவை மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்

August 17, 2021 தண்டோரா குழு

இந்தியன்ஆயில் நிறுவனம் சார்பில் பள்ளி மாணவிகளுக்கான விருதுகள் கோவையை சேர்ந்த அரசு பள்ளி மாணவிக்கு வழங்கப்பட்டது. அரசு பள்ளிகளில், 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக அளவில் மதிப்பெண் பெற்ற கோவையை சேர்ந்த மாணவிக்கு தலா ரூ.10,000 ஒரு முறை ஸ்காலர்ஷிப்-க்கான காசோலைகளை,இந்தியன்ஆயில் நிறுவனம் காணொலிக்காட்சி வாயிலாக நடத்திய நிகழ்வில் P. ஜெயதேவன் வழங்கினார்.

இந்திய நாட்டின் விடுதலையின் பிளாட்டினம் கொண்டாடத்தை ஒட்டி, இந்தியன்ஆயில் நிறுவனம், 2021ஆம் ஆண்டில், ஒவ்வொரு மாநிலத்திலும், போர்டு தேர்வுகளில் அரசு பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற, அதிக அளவில் மதிப்பெண் பெற்ற 10ஆம் வகுப்பு சார்ந்த 75 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்கி வருகிறது.

சுதந்திர தினக்கொண்டாட்ட தருணத்தில், நாடெங்கிலும் உள்ள மாணவிகளுக்கு மொத்த கல்வி உதவித்தொகையாக ரூ. 2.5 கோடி வழங்கப்பட்டது.விழாவில் கோவை மாவட்டம், அன்னூர், கே.ஜி. அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி எம்.வேணி மற்றும் நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவியர்களுக்கு இந்த ஸ்காலர்ஷிகள் வழங்கப்பட்டன.

மேலும், சிறைச்சாலையில் உள்ளவர்கள், தங்கள் வாழ்வை நல்லமுறையில் சீரமைத்துக் கொள்ள உறுதுணை புரியும் வகையில், சிறைவாசிளுக்கு குறிப்பிட்ட சில விளையாட்டுகளில் பயிற்சி அளிக்க, இந்தியன்ஆயில் நிறுவனம் நாடெங்கிலும் உள்ள சில தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைச்சாலைகளில் பரிவர்த்தன் என்கிற முன்முயற்சியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த பயன்மிக்க முன்முயற்சியை, இந்தியன்ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா அவர்கள், இந்தியன்ஆயில் செயல் இயக்குநர் (மண்டல சேவைகள்) – தென் மண்டலம் K. சைலேந்த்ரா, இந்தியன்ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான செயல் இயக்குநர் மற்றும் மாநில தலைவர் P. ஜெயதேவன், புழல் மத்திய சிறைச்சாலையின் காவல்துறை துணைத் தலைவர் (சிறைகள்) முருகேசன் ஆகியோர் முன்னிலையிலும் இந்தியன்ஆயில், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையிலும் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இதன் தொடாச்சியாக கோயம்புத்தூர் உட்பட தமிழகத்தில் உள்ள ஒவவொரு மாவட்டத்திலும் உள்ள அணைத்து முக்கிய சிறைச் சாலைகளில் இந்த திட்டம் நடைமுறைபடுத்தப்படும்
இந்தியாவெங்கிலுமுள்ள சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு பேட்மிண்ட்டன், கைப்பந்து, செஸ், டென்னிஸ் மற்றும் கேரம் ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படும். நான்கு வார கால பயிற்சியின் போது, 129 சிறைக்கைதிகளுக்கு, மனமகிழ்ச்சிக்கு என்பதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஏதுவாகவும் விளையாட்டுகளின் அடிப்படை அம்சங்களும் நுணுக்கங்களும் கற்றுத் தரப்படும்.

இந்த கற்றல் முயற்சிகளின் மூலமாக, பங்கேற்பவர்களின் தன்னம்பிக்கையும் சுய கம்பீரமும் மேம்படும் என்பதில் ஐயமில்லை. இந்த பயிற்சி நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கு உரிய விளையாட்டு உபகரணங்களையும் சாதனங்களையும் இந்தியன்ஆயில் நிறுவனத்தால் வழங்கப்படும்.

மேலும் படிக்க