September 30, 2023 தண்டோரா குழு
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்கிடெக்ட்ஸ் (IIA), கோவை மையம் மற்றும் ரோட்டரி மீன்ஸ் பிசினஸ் ஃபெல்லோஷிப்புடன் Rotary Means Business Fellowship இணைந்து “உலக கட்டிடக்கலை தினத்தை” கொண்டாடுகிறது.
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் உள்ள ஆர்க்கிடெக்டுகளின் திட்டப் பணிகளின் கண்காட்சி 30.9.23 – 1.10.23 சனி மற்றும் ஞாயிறு அன்று காலை 10:00 முதல் மாலை 7:00 மணி வரை கோவை அவிநாசி ரோடு, ஜிடி மியூசியம் கண்காட்சி அரங்கத்தில் நடைபெறுகிறது.
தொடக்க விழாவில் வரவேற்புரையாற்றிய ஆர்க்கிடெக் ஜெயக்குமார், தலைவர் IIA கோயம்புத்தூர் மையம், பல்வேறு திட்டங்கள் மற்றும் நகர திட்டங்களில் ஆர்க்கழடெடுகளின் சேவைகளை ஈடுபடுத்த வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பேசினார்.கிராந்தி குமார் பதி, IAS, கோவை மாவட்ட ஆட்சியர் உலக கட்டிடக்கலை தின கண்காட்சியை துவக்கி வைத்தார்.
அவர் ஐஐஏ கோயம்புத்தூர் மையமானது ஆர்க்கிடெக்களின் திறமைகளை வெளிப்படுத்தியதற்காகவும், கட்டிடக்கலை துறை குறித்து பொதுமக்களிடையே சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காகவும் பாராட்டினார்.ரோட்டரி மீன்ஸ் பிசினஸ் பெல்லோஷிப் (RMBF) தலைவர் Rtn. பி.ஏ. ஜோசப் கூறுகையில், இந்த கண்காட்சியில் ரோட்டரி சங்கம் பங்கேற்பதில் மகிழ்ச்சி பெருமை கொள்கிறது என்றார்.
உலக கட்டிடக்கலை நாள் வரைதல் போட்டி
உலக கட்டிடக்கலை தினத்தை முன்னிட்டு, கோவையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப ஆர்க்கிடெக்ஸ் (IIA), கோவை மையம் மற்றும் ரோட்டரி மீன்ஸ் பிசினஸ் பெல்லோஷிப் அமைப்புடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டியை நடத்தியது. இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 1,000 த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
1.10.23 அன்று நடைபெறும் விருது வழங்கும் விழாவின் போது சிறப்பு விருந்தினர்களான வழக்கறிஞர் திரு. என். சுந்தரவடிவேலு மற்றும் தொழிலதிபர் திரு. ஐயோகாகா என். சுப்பிரமணியம் ஆகியோர் பரிசுகளை வழங்குவார்கள்.