July 13, 2017 தண்டோரா குழு
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தின் மூன்றாவது ரன்வேயை 5 பில்லியன் பவுண்ட் கொண்ட திட்டத்தை இந்திய வம்சவாளி தொழிலதிபர் சமர்பித்துள்ளார்.
லண்டனில் வசிக்கும் இந்திய வம்சவாளி தொழிலதிபர் சுரிந்தர் அரோரா, இவர் சர்வதேச ஹோட்டல்களுக்கு சொந்தக்காரர்.லண்டன் ஹீத்ரோ விமானநிலையத்தின் மூன்றாவது ரன்வேயை உருவாக்க சுமார் 17.5 பில்லியன் பவுண்ட் திட்டத்தை அரசு அறிவித்தது. அதே திட்டத்தை 5 பில்லியன் பவுண்டில் முடிக்கும் ஒரு புதிய திட்டத்தை அரோரா சமர்பித்துள்ளார். அவருடைய திட்டத்தை பிரிட்டின் அரசு பரிசீலித்து வருகிறது.
இந்த திட்டம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்று கருதுகிறோம். நாங்கள் பயணிகளை எங்கள் திட்டத்தின் முக்கிய பங்காக கருதுகிறோம். தற்போது ஹீத்ரோ விமானநிலையத்தில் பயணிகள் கட்டணம் அதிகமாக இருக்கிறது. அது எதிர்காலத்திற்கு சரியான மாதிரி அல்ல என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஹீத்ரோ விமான ரன்வே திட்டத்தின் செலவை குறைக்க ஏற்கனவே சில யோசனைகளை அந்த விமானநிலைய அதிகாரிகள் முடிவு செய்து வருவதாகவும், ஹீத்ரோ விமான நிலையத்தின் விரிவாக்கத்தை குறித்த திட்டங்களை பிரிட்டன் அரசு ஆதரித்து உள்ளது என்றும் ஹீத்ரோவின் மூன்றாவது ரன்வேயின் கட்டுமான பணிகள் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தான் தொடங்கும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.