April 12, 2016 www.dekhnews.com
வீணு பல்லிவல், 44, இந்தியாவின் முதன்மையான பெண் மோட்டார் சைக்கிள் ரேசரான இவர் மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ள விதிஷா மாவட்டத்தில் இரு சக்கர வாகன விபத்தில் திங்கள்கிழமை அன்று காலமானார்.
வீணு பல்லிவல் கல்லூரி பருவத்திலேயே பைக் ஓட்டுவதில் வல்லவராக இருந்தார். பின்னர் திருமணத்திற்கு பிறகு அவரது கணவர் இருசக்கர வாகனம் ஓட்டக்கூடாது எனத் தடை போட்டதால் சிறிது காலம் ஒட்டாமல் இருந்தார்.
பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்த காரணத்தால் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து மீண்டும் தனது ஹார்லி டேவிட்சன் பைக்கில் வலம்வரத் துவங்கினார். இந்நிலையில் ஐவரும் இவருடன் பைக் பயணம் செய்யும் தீபேஷ் தன்வர் என்பவரும் இணைந்து இந்தியா முழுவதும் சென்று அது குறித்து ஒரு குறும்படம் எடுக்க முற்பட்டனர்.
இதற்காக இருவரும் தனித்தனி இருசக்கர வாகனங்களில் பயணத்தை துவங்கினர். இந்நிலையில் நேற்று இருவரும் கயரச்பூர் என்ற இடத்திற்கு வந்த பொது வீணு பல்லிவளின் பைக் நிலை தடுமாறி சாலையில் விழுந்துள்ளது.
இதில் காயமடைந்த அவரை முதலில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து விதிஷா மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டது எனத் தெரிவித்துள்ளனர்.
அதனால் அவரது உதவியாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து நண்பர்கள் கூறும்போது, இவர் தன்னுடைய ஹர்லி டேவிட்சன் பைக்கை 180 கிலோ மீட்டர் வேகத்தில் கூட கட்டுப்படுத்தும் திறன் கொண்டவர்.
ஆனால் எப்படித் தடுமாறினார் எனத் தெரியவில்லை எனத் தெரிவித்தனர். அதே சமயம் அவர் விபத்து தடுப்பு உடுப்புகள் அனைத்தும் அணிந்திருந்தும் உயிரிழந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.