January 31, 2018 தண்டோரா குழு
இந்தியாவில் 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அபூர்வ சந்திர கிரகணம் தொடங்கியுள்ளது.
150 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் அரிய வகை சந்திர கிரகணம் துவங்கியது.நிலா சிவப்பு நிறமாக மாறும் இந்த கிரகணமானது மாலை 5.18 மணிக்கு துவங்கியது. இரவு 8.41 மணி வரை வெறும் கண்களால் பார்க்கலாம். மாலை 6.21 மணிக்கு தெளிவாகவும், இரவு 7.37 மணிக்கு முழு சந்திர கிரஹணத்தையும் பார்க்கலாம்.சந்திர கிரகணத்தை கண்களால் பார்த்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய இணை இயக்குநர் சவுந்தரராஜ பெருமாள் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் சந்திர கிரகணத்தை மாலை 6.05 மணி முதல் பார்க்கலாம்; கோவையில் 6.18 மணிக்கு தெரியும் என்று கூறினார்.