April 6, 2017 தண்டோரா குழு
பிரபல வீடியோ தளமான யூடியூப், யூடியூப் கோ என்னும் புதிய வசதிக்கான பீட்டா வெர்சனை அறிமுகப்படுத்தியுள்ளது.உலக அளவில் அதிக பயனாளர்களை கொண்டு முக்கிய வீடியோ தளமாக விளங்கும் யூடியூப் தற்போது புதிய அப்டேட்டாக “யூடியூப் கோ”எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆங்கிலம், தமிழ் உட்பட 7 மொழிகளில் இந்த’யூடியூப் கோ’வை பயன்படுத்த முடியும்.இந்த ஆப்பில் வீடியோக்களின் முன்னோட்டம், டேட்டா இல்லாமல் வீடியோ பகிர்தல்,2ஜி நெட்வொர்க்கிலும் வீடியோவைப் பார்க்கவும், டவுன்லோடு செய்யவும் முடியும். மேலும் வீடியோ பிடித்திருந்தால் அதை சேவ் செய்து,பின்னர் ஆப் லைனில் பார்க்கக்கூடிய வசதியும்
உள்ளது.பீட்டா அப்ளிகேஷனை டவுன்லோடு செய்தால் “யூடியூப் கோ”வை எளிதாகப் பயன்படுத்தலாம். இந்த வசதி இப்போது இந்தியாவில் மட்டும் அறிமுகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.