• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவில் இதுவே முதல் முறை ! – பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக ஆடியோ விளக்கத்துடன் “மாயோன்” டீசர் !

October 8, 2021 தண்டோரா குழு

Double Meaning Production தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் வழங்கும், N. கிஷோர் இயக்கத்தில், சிபிராஜ் நடிக்கும் “மாயோன்” திரைப்படத்தின் டீசர், இந்தியாவில் முதல் முறையாக, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக ஆடியோ விளக்கத்துடன் வெளியாகிறது.

மாயோன்” திரைப்படத்தில் சிபிராஜ் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அவரது காதலியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். இப்படத்தை N. கிஷோர் இயக்கியுள்ளார். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். தமிழின் முன்னணி நடசத்திரங்களான K.S. ரவிக்குமார், ராதா ரவி, பக்ஸ், ஹரீஷ் பேரடி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

Double Meaning Production அருண்மொழி மாணிக்கம் தமிழ் திரையுலகில் புதிதான களத்தில், தரமான படைப்புகளை தந்து வருகிறார். அவர் திரைக்கதை ஆசிரியராக அறிமுகமாகும், “மாயோன்” திரைப்படம், இந்திய திரையுலக சரித்திரத்தில், அனைவரும் பெருமைப்படத்தக்க வகையிலான ஒரு புதிய புள்ளியை துவங்கி வைத்துள்ளது.

“மாயோன்” டீசர் பார்வையாளர்கள் இந்திய திரைப்பயணத்தில் முன்னெப்போதும் கண்டிராத வகையில், ஒரு புது விதமான அனுபவத்துடன வரவுள்ளது. இந்திய திரையுலகில் பார்வையற்றோருக்கான ஆடியோ விளக்கத்துடன் வரும் முதல் டீஸர் இதுவாகும். இந்த டீசர் ஆங்கில சப்டைட்டில்களுடன் அக்டோபர் 8,(இன்று) அன்று மாலை 6.02 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் கூறியதாவது,

எங்கள் நிறுவனம் சார்பில் உருவாகும் “மாயோன்” திரைப்படம், எங்கள் அனைவருக்கும் மிகவும் நெருக்கமான படைப்பாகும். இப்படத்தின் கதை கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை பற்றிய புதிய மற்றும் தனித்துவமான கருத்தை கையாள்கிறது, இது தமிழ் திரையுலகிற்கு மிகவும் புதிதானதாகும். இத்திரைப்படம் ஒவ்வொரு அம்சத்திலும், ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்க வேண்டுமென விரும்பினோம்.

முழுமையான படைப்பாக இப்படம் தமிழ் ரசிகர்களுக்கு, இதுவரையிலும் இல்லாத வகையில் ஒரு அருமையான அனுபவத்தை உறுதியாக தரும். நேர்த்தியான கதையமைப்பு, சிபிராஜின் அருமையான நடிப்பு, மேஸ்ட்ரோ இளையராஜாவின் மனதை உருக்கும் இசை என, ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக இருக்கும்.

டீசரில் ஒரு புதுமையை செய்ய வேண்டுமென நாங்கள் யோசித்த போது, மாற்றுத்திறனாளிகளுக்கான ஆடியோ விளக்கம் செய்யலாம் என்கிற ஐடியா தோன்றியது. முன்னதாக எங்கள் தயாரிப்பில் வெளியான “சைக்கோ” திரைப்படத்தின் சிறப்பு திரையிடல், மாறுத்திறனாளிகளுக்கான ஆடியோ விளக்கத்துடன் திரையிடப்பட்டது. அந்த திரையிடலை மாற்றுத்திறனாளிகள் மிகுந்தமகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

அது எங்களுக்கு மிகுந்த மனநிறைவை தந்தது. அவர்கள் அனைவரும் எங்கள் நிறுவனத்தின் அடுத்த திரைப்படத்தையும், இதே போல் ஆடியோ விளக்கத்துடன் முதல் நாளே திரையிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆதலால் எங்கள் முழுத்திரைப்படத்தையும் காணும் முன்னரே, அவர்களின் மகிழ்ச்சியை காண எண்ணி, மாயோன் டீசரை ஆடியோ விளக்கத்துடன் வெளியிட தீர்மானித்தோம்.

மாயோன் டீசரை ஆடியோ விளக்கத்துடன் வெளியிடும் இந்த முயற்சி, வெறும் விளம்பரத்திற்காகவும், புதுமைக்காகவும் செய்யும் முயற்சி அல்ல. திரையுலகில் மற்ற திரைப்படங்களை தயாரிக்கும் அனைவரும், மாற்றுத்திறனாளிகளை மனதில் வைத்து இதனை செய்ய வேண்டும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த முயற்சியை இந்திய திரையுலகில் முதன் முறையாக நாங்கள் மேற்கொள்கிறோம்.

ஆடியோ விளக்கத்துடனான டீசர் அக்டோபர் 8, 2021 அன்று மாலை 6.02 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. முன்னதாக ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக,பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை திரையரங்குக்கு அழைத்து, அதே டீசர் அக்டோபர் 7 ஆம் தேதி திரையிடப்பட்டது. மேலும் ஆடியோ விளக்கங்களை வழங்குவதற்கு, திரைப்பட ஆர்வம் உள்ளவர்களை வைத்து, ஒரு போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளருக்கு டிரெய்லரில் ஆடியோ விளக்கத்தை நிகழ்த்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். முழு நீள திரைப்படத்திலும் இது மாதிரியான இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன என்றார்.

இப்படத்தின் டீசர் ஆடியோ விளக்கங்களை இன்ஸ்பயரிங் இளங்கோ வழங்கினார்.
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் தொழில்வணிக நிறுவனங்கள், தொலைக்காட்சி ஊடகங்கள், கல்வி நிறுவனங்கள் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் விரும்பி அழைக்கிற எழுச்சி பேச்சாளராக இவர் செயல்பட்டு வருகிறார்.

புகழ்பெற்ற குரல்கலைஞர் , பின்னணி குரல் கொடுக்கும் ஒரே பார்வைச் சாவல் கொண்ட குரல்கலைஞர் , முனைவர்.இன்ஸ்பயரிங் இளங்கோ மட்டும் தான். பல விளம்பர , ஆவண ,குறும்படங்களின் பின்னணியில் இவரது காந்தக் குரல்தான் ஒலிக்கிறது , ரேமண்ட்ஸ் , பிரின்ஸ் ஜீவல்லர்ஸ் , அடையார் ஆனந்தபவன் , பாரி இந்தியன்டூரிசம் தமிழ் நாடு ரிசம் 9 ” உள்ளிட்ட பல விளம்பரத்திற்கு இவர் பின்னணி குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க