December 20, 2022 தண்டோரா குழு
சர்வதேச அளவில் தொற்று காலத்தால் உலக அளவில் மனநல பிரச்னைகள் அதிகரித்துள்ளன. உலக நலமேலாண்மை நிறுவனமான மெடிக்ஸ், பல பல ஆயிரம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. 300 மருத்துவர்கள், சர்வதேச அளவில் உள்ள 4500க்கும் மேற்பட்ட நிபுணர்களுடன் தொடர்பில் உள்ளனர். இந்த நிறுவனம், ஆதித்யா பிர்லா கல்வி அறக்கட்டளை நிறுவனத்துடன் இணைந்து 600க்கும் மேற்பட்ட நிபுணர்களை ஒருங்கிணைக்கிறது. இந்த இணைப்பால் 121 மில்லியன் வாடிக்கையாளர்கள் பயன்பெறுகின்றனர்.
இந்த இணைப்பின் ஒரு பகுதியாக , எம்பவர் மற்றும் மெடிக்ஸ் இந்தியாவில் இளையதலைமுறையினர் மனநல சேவைகளை எளிதாக பெற முடியும். புதிய வழிகளையும் உதவிகளையும் பெற உதவுகிறது. புதிய புனிதமிக்க அணுகுமுறையால் மனநலம் மற்றும் உணர்வுகளுக்கான ஆலோசனைகளை, நாட்டின் இளைய தலமுறைகளை சென்றடைகிறது.
பல்வேறு வகையான திட்டங்களுடன், வாடிக்கையாளர்கள், பங்குதார்கள், காப்பீட்டுதாரர்கள், நிறுவன பணியாளர்கள் மற்றும் பிற பங்குதார்கள் எளிதாக எம்பவர் கிளினிக் மற்றும் மனநல மருத்துவ சேவைகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த இந்த எம்பவர் மற்றும் மெடிக்ஸ் திட்டமிட்டுள்ளது.
எம்பவர் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் நீரஜா பிர்லா கூறுகையில்,
” இந்தியாவின் மனநல மருத்துவத்தி்ல் எம்பவர் முன்னோடியாக உள்ளது. இந்த இணைந்து செயலாற்றும் திட்டம், மாற்றத்துக்கான மேலும் ஒருபடி முன்னேற்றத்தை அளிக்கிறது. உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், சமுதாய நிலைகளாலும் ஒட்டுமொத்தமான வாழ்க்கை முறையில், மனநலமும் உடல்நலமும் சமநிலையில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரே தளத்தில் மனநலமும், உடல் நலமும் பெற விரும்புவோருக்கு ஒரு புனிதமான தீர்வை தருகிறது. இது ஒரு புதிய அத்தியாத்தை ஏற்படுத்தும். மனநலம் தொடர்பான ஆராய்ச்சிகள், நிகழ்வுகளை இது ஊக்கப்படுத்தும். சிக்கல்களை தீர்க்க உதவும்,” என்றார்.
மெடிக்ஸ் தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைவர் சிகல் அட்ஸ்மன் கூறுகையில்,
” எம்பவர் உடன் இணைந்து செயலாற்றுவதில் நாங்கள் பெருமையடைகிறோம். மனநலம் எண்ணத்துக்கும், செயலுக்கும், உணர்வுகளுக்கும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இளைய தலைமுறையினர் பல்வேறு அழுத்தங்களால், காரணிகளால், சவால்களால் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு ஏற்படும் மனநல சிக்கல்களை தீர்க்கவும், சவால்களில் இருந்து மீளவும் உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறோம்,” என்றார்.
எம்பவர் மற்றும் மெடிக்ஸ் பங்குதார்களாக செயலாற்றுவதால், வரும் 2023ம் ஆண்டில் மனநல சேவையில் புதிய மாற்றம் ஏற்படுவதோடு, சிறப்பான அணுகுமுறையும் கிடைக்கும்.