May 19, 2017 தண்டோரா குழு
நடிகை பாவனா காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இதன்தொடர்ச்சியாக சினிமாவில் தங்களுக்கு நேர்ந்த மோசமான அனுபவங்கள் குறித்து பல நடிகைகள் வெளிப்படையாகக் கூறினர்.
இதனால் நடிகைகளின் பாதுகாப்பு, சமமாக மதிக்கப்படுவது குறித்து விரிவான விவாதங்கள் எழுந்தன.இந்நிலையில், தற்போது நாட்டில் முதல்முறையாக, மலையாள நடிகைகள் சேர்ந்து ஓர் பாதுகாப்பு அமைப்பை தொடங்கியிருக்கின்றனர்.இந்த அமைப்பிற்கு ‘வுமன் இன் சினிமா கலக்ட்டிவ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
மஞ்சு வாரியர், பீனா பால், பார்வதி, விது வின்சன்ட், ரீமா கல்லிங்கல் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து இந்த அமைப்பை வழி நடத்தவுள்ளனர். மேலும், பெண் கலைஞர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி, அதற்கான ஆதரவைப் பெற நேற்று மாலை கேரள முதல்வர் பினராயி விஜயனை இந்த அமைப்பினர் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.