September 2, 2021 தண்டோரா குழு
இந்தியாவில் முதல் முறையாக செப்டம்பர் 16 அன்று வேலை வாய்ப்பு நாளை நடத்துகிறது. அமேசான் மொத்தமாக 8000 நேரடி வேலை வாய்ப்புகள் இந்தியாவில் தற்போது உள்ளன. அமேசானின் 140 ரெக்ரியூட்டர்கள் சுமார் 2000 பேருக்கு தொழிற்பயிற்சி அமர்வுகளை வழங்குவார்கள்.
இது ஆர்வமிக்க பங்கேற்பாளர்களுக்கு அந்த நிறுவனத்திலோ அல்லது வேறு இடங்களிலோ அவர்களது தொழில் வளர்ச்சிக்கு உதவும்.இந்தியாவில் முதல் முறையாக வேலை வாய்ப்பு நாளை செப்டம்பர் 16 அன்று நடத்த விருப்பதாக அமேசான் அறிவித்தது. இந்த மெய்நிகர் மற்றும் கலந்தாய்வு நிகழ்வு அமேசானின் தலைமைப்பண்பு மற்றும் ஊழியர்களை ஒன்றாக கொண்டு வந்து அமேசானை ஒரு அற்புதமான பணியிடமாக மாற்றுகிறது. இங்கு வேலை செய்வது எப்படி இருக்கிறது மற்றும் 21 ஆம் நூற்றாண்டில் இந்தியா தனது உண்மையான திறனை வெளிக்கொணர்வதில் நிறுவனம் எவ்வாறு உறுதியாக உள்ளது என்பதை பகிர்ந்து கொள்ளும்.
மேலும் அமேசான் தற்போது 35 நகரங்களில் 8000 நேரடி வேலை வாய்ப்புகளை வழங்குவதாக தெரிவித்துள்ளது. பெங்களூரு, ஐதராபாத், சென்னை, குர்கான், மும்பை, கொல்கத்தா, நொய்டா, அமிர்தசரஸ், அஹமதாபாத், போபால், கோயம்புத்தூர், ஜெய்பூர், கான்பூர், லூதியானா, புனே மற்றும் சூரத் ஆகிய நகரங்களும் இதில் அடங்கும்.இந்த வேலை வாய்ப்புகள் பெருநிறுவன தொழில் நுட்பம், வாடிக்கையாளர் சேவை மற்றும் செயல்பாட்டுப் பாத்திரங்களில் பரவியுள்ளன.
இந்த வேலை வாய்ப்பு நாளில் சுவாரஸ்யமான மற்றும் நிறைய தகவல்கள் நிறைந்த அமர்வுகளை வழங்கவுள்ளது.இதில் அமேசானின் தலைமை நிர்வாக அதிகாரி, ஆண்டி ஜஸ்ஸி தனது சொந்த தொழில் அனுபவத்தையும் வேலை தேடு வோருக்கான ஆலோசனைகளையும் வழங்கவுள்ளார்.அமேசானின் சர்வ்தேச மூத்த துணைத்தலைவரும்,இந்திய தலைவருமான அமித் அகர்வால்,தொடக்க உரையை வழங்குவார்.அதன் பிறகு அமேசான் தலைவர்கள் மற்றும் ஊழியர்களுடன் அற்புதமான குழு கலந்துரையாடல்கள் ‘அமேசானில் வாழ்க்கை’, அதன் தனித்துவமான பணியிட கலாச்சாரம் மற்றும் அமேசானை சிறந்த பணியிடமாக ரியூட்டர்கள் நாட்டில் வேலை வாய்ப்பைத்தேடும் 2000 பேருக்கு நேருக்கு நேர் தொழிற்பயிற்சி அமர்வுகளை வழங்க உள்ளனர். வேலை தேடும் செயல் முறையை எவ்வாறு திறம்பட அணுகுவது, சுயவிபரக்குறிப்பை உருவாக்கும் திறன்கள் மற்றும் நேர்காணலுக்கு தேவையான குறிப்புகள் ஆகிய ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.
இது வேலைதேடுபவர்கள் தங்களுக்கு சரியான வேலையைத் தேடுவதற்கு உதவும். “எங்கள் வாடிக்கையாளர்கள் சார்பாக கண்டு பிடிக்கும் வாய்ப்பும், பெரிய அளவிலான தாக்கமும் வேலை வாய்ப்பு தேடுவோருக்கு அமேசான் ஒரு தனித்துவமான இடமாக அமைகிறது என அமேசான் இந்தியாவின் சர்வதேச மூத்ததுணைத்தலைவரும் அமேசான் இந்திய நாட்டின் தலைவருமான அமித் அகர்வால் கூறினார்.
அவர் மேலும் பேசுகையில்,
“அமேசான் ஊழியர்களின் தலைமையிலான கண்டுபிடிப்பு அன்றாட வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் எவ்வாறு தாக்கியுள்ளது என்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. முன்பைவிட அதிகமான வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகங்கள் எங்களை இப்போது நம்பியுள்ளன.
வாழ்க்கையில் அரிதாக கிடைக்கும் இந்த வாய்ப்பின் மூலம் இந்தியாவை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான செயலில் ஆர்வத்துடன் வேலை செய்ய நினைப்பவர்களை தேடுகிறோம். இந்த வேலை வாய்ப்பு நாளில், 21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் திறனைப் பயன்படுத்துவதற்கான எங்கள் நீண்ட கால அர்ப்பணிப்பைப் பகிர்ந்து கொள்ள நாங்கள் எதிர் நோக்குகிறோம், மேலும் இந்த மரபுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் தொழில்வாய்ப்புகள் உள்ளன” என்றார்.
அமேசான் இன்று பொறியியல், பயன்பாட்டு அறிவியல், வணிக மேலாண்மை, விநியோகச் சங்கிலி, செயல்பாடுகள், நிதி, மனித வளத்திலிருந்து பகுப்பாய்வு, உள்ளடக்க உருவாக்கம் மற்றும் கையகப்படுத்தல், சந்தைப்படுத்தல், ரியல் எஸ்டேட், பெருநிறுவன பாதுகாப்பு, வீடியோ, இசை மற்றும் பலவற்றில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட நிபுணத்துவம் பெற்ற ஊழியர்களைக் கொண்டுள்ளது. அமேசானின் இரண்டாவது பெரிய தொழில் நுட்பமையமாக இந்தியா உள்ளது, இந்திய திறமை இந்தியாவிற்காக மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் புதுமைகளைக் கொண்டுள்ளது.
அமேசான் நவீன, டிஜிட்டல் இந்தியா பற்றிய அரசாங்கத்தின் பார்வைக்கு நெருக்கமாக இணைந்துள்ளது. நிகழ்வில் ராகவாராவ், துணைத்தலைவர் நிதி மற்றும் இந்தியா சிஎஃப்ஓ, அமேசான், புனித் சந்தோக் வர்த்தகத் தலைவர், ஏடபிள்யுஎஸ் இந்தியா மற்றும் தெற்காசியா, ஏஐஎஸ்பிஎல் மற்றும் மகேந்திர நெரூர்கர் அமேசான் பே இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி, ஆகியோரின் சக்தி வாய்ந்த குழு கலந்துரையாடல் மூலம், அமேசான் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மூன்று அமேசான் வணிகப்பகுதிகளான இணைய வழி, நிதிச் சேவைகள் மற்றும் வலைச் சேவைகளின் எதிர்காலக் கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொள்ளும்.
சிறிய நகரங்கள் உட்பட நாடு முழுவதும் அமேசான் உருவாக்கும் வேலை வாய்ப்புகளின் ஸ்பெக்ட்ரம் பற்றி பேசும், துணைத் தலைவர், வாடிக்கையாளர் நிறைவேற்றுசெயல்பாடுகள், ஏபிஏசி, எம்இஎன்ஏ மற்றும் எல்ஏடிஎஎம் இன் அகில் சக்சேனாவின் கலந்துரையாடலும் இந்த நிகழ்வில் இடம் பெறும். மற்ற உற்சாகமான குழு விவாதங்கள் மூலம், பங்கேற்பாளர்கள் அமேசான் ஊழியர்களிடமிருந்து அவர்களின் அனுபவங்களைக் கேட்கும் வாய்ப்பைப் பெறுவார்கள், அவர்கள் தங்கள் தொழில் மாற்றங்கள், புதுமைகளைக் காணுதல் மற்றும் உருமாறும் திட்டங்களில் பணியாற்றுவது மற்றும் வித்தியாசமான அமேசான் கலாச்சாரம் முதல் நாளிலிருந்து அவர்களுடைய மனநிலையை மாற்றியது என தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வார்கள்.
2025 – க்குள் 20 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை வழங்க அமேசான் திட்டமிட்டுள்ளது. மேலும் இது வரை இந்தியாவில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அமேசான் நாடு முழுவதும் மேலும் வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் திறன் முயற்சிகளை மேம்படுத்த அரசாங்கத்தின் கவனத்துடன் தொடர்ந்து இணையும், மேலும் அதிக இளைஞர் தொகையைக் கொண்ட நமது நாட்டின் மக்கள் தொகை ஈவுத் தொகையை அதிகரிக்க உதவுகிறது.அமேசான் ரெக்ரியூட்டர்களுடனான நேருக்கு நேர் தொழிற்பயிற்சி அமர்வானது செப்டம்பர் 16 மற்றும் 17 என இரண்டு நாட்களாக நடைபெறும். இந்திய நேரப்படி அமேசான் வேலை வாய்ப்பு நாள் செப்டம்பர் 16 அன்று காலை 10 மணிக்கு தொடங்கும். இங்கு கிளிக் செய்து மேலும் தெரிந்து கொண்டு பதிவு செய்யலாம்.