• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவுக்கே தலைமைதாங்கும் பண்பு தமிழர்களுக்கு இருக்கிறது

January 21, 2017 தண்டோரா குழு

தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியாவுக்கே தலைமை தாங்கும் பண்பு தமிழர்களுக்கு இருக்கிறது என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் சமூக வலைதளங்களில் சனிக்கிழமை கூறியிருப்பதாவது:

“தமிழக மக்களின் இந்தப் போராட்டம் ஜல்லிக்கட்டு விவகாரம் முடிந்ததும் முடிந்து விடக்கூடாது. இந்தியாவின் மிகப்பெரிய சவாலாக விளங்கும் பிரச்சனைகளான வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், போதிய சுகாதார வசதியின்மை, சத்துணவுக் குறைபாடு போன்றவற்றுக்கு எதிராகவும் இந்தப் போராட்டம் தொடர வேண்டும்.

தமிழர்கள் ஏற்றிய இந்த தீப்பொறி, நாடு முழுவதும் பரவி, நமது மிகப்பெரிய பிரச்சினைகளை முறியடிக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தினை இந்திய மக்கள் முன்னுதாரணமாக வைத்துக் கொண்டு அதைப் பின்பற்ற வேண்டும். எல்லோரும் ஒருங்கிணைய வேண்டும். சாதி, மத, இனம் என்ற எந்த அடிப்படையிலும் பிரிவினை ஏற்பட்டுவிடக் கூடாது. இவ்வாறு போராடினால், இந்தியாவில் உள்ள அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.

இந்தப் போராட்டத்தில், அரசியல்வாதிகள் தலையிட அனுமதி மறுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியாவுக்கே தலைமை தாங்கும் பண்பு தமிழர்களுக்கு இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டார்கள். இதே பாதையில் பல சவால்களை எதிர்கொள்ளலாம். தமிழர்கள் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன். தமிழ் மக்கள் வாழ்க”

இவ்வாறு மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.

மேலும் படிக்க