June 17, 2017
தண்டோரா குழு
இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெறும் சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் சுமார் 2000 கோடி வரை சூதாட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இங்கிலாத்தில் நடைபெற்று வருகிறது. இதில், நாளை நடைபெறும் இறுதிபோட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதுமட்டுமின்றி சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிபோட்டியில் மோதவுள்ளன. இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்தில் சூதாட்டத்திற்கு அனுமதி உள்ளதால், இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் போது மொத்தம் 2,000 கோடி ரூபாய் வரை சூதாட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக அனைத்து இந்திய கேமிங் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பெரும்பாலானோர் இந்திய அணிக்கு சாதகமாக பெட் கட்டுவார்கள் என்பாதால் இந்திய அணி மீது பெட் கட்டுவோருக்கு குறைந்த அளவிலேயே பரிசு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்திய அணிக்கு 100 ரூபாய் பெட் கட்டினால் 147 ரூபாய் கிடைக்குமாம். அதே பாகிஸ்தான் அணிக்கு 100 ரூபாய் கட்டினால் 300ரூபாய் கிடைக்குமாம்.