• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியா – பிரான்ஸ் ஆராய்ச்சி கருத்தரங்கு – ” மேம்பட்ட விண்வெளிப் பொருட்களின் உற்பத்தியில் புதுமை “

March 3, 2023 தண்டோரா குழு

Lகோயம்புத்தூர் உற்பத்தியியல் துறை , பூ.சா.கோ. தொழில் நுட்பக்கல்லூரி, கோயம்புத்தூர் மற்றும் யுனிவர்சிட்டி துலூஸ் III – க்ளெமென்ட்அடர் இன்ஸ்டிடியூட் பிரான்ஸ் இணைந்து 2023 மார்ச் 2 மற்றும் 3 தேதிகளில் ” மேம்பட்ட விண்வெளிப்பொருட்களின் உற்பத்தியில் புதுமை ” என்ற தலைப்பில் இரண்டு நாள் ஆராய்ச்சிக் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளனர்.

நிதியுதவி: இந்தியா – பிரான்ஸ் மேம்பட்ட ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கான மையம் ( CEFIPRA),அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை ( DST ), இந்திய அரசு , புது தில்லி. இந்த கருத்தரங்கில் இந்தியா மற்றும் பிரான்ஸைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் , கல்வியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை ஒன்றிணைத்து,மேம்பட்ட விண்வெளிப் பொருட்களின் உற்பத்தி மற்றும் இயந்திரத்துறையில் சமீபத்திய போக்குகள் , முன்னேற்றங்கள் மற்றும் சவால்களைப் பற்றி விவாதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது . இக்கருத்தரங்கில் முக்கிய விரிவுரைகள் , தொழில் நுட்ப அமர்வுகள் மற்றும் குழுவிவாதங்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் மேம்பட்ட பொருட்கள் உற்பத்தி நுட்பங்கள் மற்றும் எந்திர செயல் முறைகளின் மாதிரியாக்கம் ஆகியவை இடம்பெறும்.

இந்த கருத்தரங்கு, ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் , அவர்களின் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும் , எதிர்கால ஆராய்ச்சி திட்டங்களுக்கு ஒத்துழைப்பை ஏற்படுத்தவும் ஒரு தளத்தை வழங்கும்.கருத்தரங்கு இந்தியா மற்றும் பிரான்சில் விண்வெளித்துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆராய்ச்சியாளர்கள் தங்கள் நிபுணத்துவம் மற்றும் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

தேதி: 02.03.2023 முதல் 03.03.2023 வரை

இடம் : கன்வென்ஷன் ஹால் , பூ.சா.கோ. ஐஎம் கட்டிடம் , பூ.சா.கோ தொழில் நுட்பக்கல்லூரி ,

மேலும் படிக்க