September 1, 2024 தண்டோரா குழு
சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து கேஎப்சி இந்தியா தனது உணவகத்தை தூத்துக்குடியில் மீண்டும் திறந்துள்ளது. இந்த உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டதற்கு முக்கிய காரணமாக உணவு பொருட்களை சுத்தப்படுத்த மெக்னீசியம் சிலிக்கேட்டை பயன்படுத்துகிறது என்று கூறப்பட்டது.
வழக்கு எண். W.P. (MD) எண்.16192/2024 மீது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, சமையல் எண்ணெய் மறுபயன்பாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையில் எந்தத் தகுதியும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. மேலும் தற்போதைய வழக்கில் குறிப்பிடப்பட்ட சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதற்கு எதிரான தடை தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,அமலாக்க நடவடிக்கையில் உள்ள பல நடைமுறைக் குறைபாடுகளை எடுத்துரைத்து, உணவகத்தை நடத்துவதற்கான கேஎப்சி உரிமத்தை இடைநிறுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளார். மேலும் மக்னீசியம் சிலிக்கேட் செயற்கையானது, தடைசெய்யப்பட்ட பொருளாக இருப்பதற்குப் பதிலாக, அனுமதிக்கப்பட்ட வடிகட்டுதல் முகவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
நியமிக்கப்பட்ட அதிகாரியால் முன்னேற்ற அறிவிப்பு வெளியிடப்படாததால் உரிமத்திற்கான இடைக்கால தடை, தவறு என்று நீதிபதி குறிப்பிட்டார்.எப்எஸ்எஸ்ஏ 2006ன் பிரிவு 32(1)ன் படி, ஒரு மேம்பாட்டு அறிவிப்பு முதலில் வெளியிடப்பட வேண்டும், மேலும் அதற்கு உணவு வணிக நிறுவனம் இணங்க மறுத்தால் மட்டுமே உரிமம் இடைநிறுத்தப்பட வேண்டும். நியமிக்கப்பட்ட அதிகாரி ஜூலை 4 தேதியிட்ட வருகையின் போது முன்னேற்ற அறிவிப்பை வெளியிடவில்லை, மேலும் உணவகத்தை நேரடியாக மூடியுள்ளார் என்று கூறியுள்ளது.
இது குறித்து கேஎப்சி இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
உயர் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பானது, எங்களின் தயாரிப்புகள் அனைத்தும் சாப்பிடுவதற்கு பாதுகாப்பானது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட, உயர்தர பொருட்கள் மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மற்றும் பிற தொடர்புடைய ஆணையங்களால் அனுமதிக்கப்பட்ட உணவு பதப்படுத்தும் பொருட்களை மட்டுமே நாங்கள் பயன்படுத்துகிறோம். எங்கள் உணவகங்களில் தயாரிக்கப்படும் அனைத்து உணவுகளிலும் எந்தவித சமரசமும் செய்யாமல் நாங்கள் மிகத்தரமான உணவுகளையே தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம் என்று தெரிவித்தார்.
உயர் நீதிமன்றம் வழங்கிய இந்த இடைக்கால உத்தரவு, நாடு முழுவதும் உள்ள கேஎப்சி உணவகங்கள், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகள் மற்றும் பிற தொடர்புடைய ஆணையங்களின் விதிமுறைகளுக்கு இணங்க, பொருந்தக்கூடிய அனைத்து பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடுகளையும் பின்பற்றுகின்றன என்பதை இது மீண்டும் வலியுறுத்தி உள்ளது.எங்களின் அனைத்து தயாரிப்புகளும் உயர் தரம் மற்றும் சாப்பிடுவதற்கு மிகவும் பாதுகாப்பானவை என்று கேஎப்சி தெரிவித்துள்ளது.