• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய ஐ.டி.எம்.இ சார்பாக டிசம்பர் 8 ந்தேதி கிரேட்டர் நொய்டாவில் நடைபெற உள்ள மாபெரும் ஜவுளி கண்காட்சி

October 10, 2022 தண்டோரா குழு

ஜவுளித்துறையில் பாரம்பரியம் மற்றும் நவீனபோக்கை ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் வகையில்,வரும் டிசம்பர் மாதம் 8–ந்தேதி முதல் 13–ந்தேதி வரை லாப நோக்கமில்லாத அமைப்பான இந்திய ஐடிஎம்இ அமைப்பு உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் ‘இந்தியா ஐடிஎம்இ கண்காட்சி’யை இந்திய எக்ஸ்போசிஷன் மார்ட் நிறுவனத்தில் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு,கோவையில் நடைபெற்றது.இதில் இந்திய ஐடிஎம்இ சொசைட்டியின் தலைவர் ஹரிசங்கர் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

இந்தியா ஐடிஎம்இ2022 கண்காட்சி, உயர் தொழில்நுட்ப மிக்க ஜவுளி எந்திரங்கள், புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் ஜவுளித் துறைக்கான சேவைகளைக் காட்சிப்படுத்தும் வகையில் நடைபெற உள்ளதாகவும்,இது ஜவுளி துறைக்கான மிகப்பெரிய சந்தை வாய்ப்பிற்கான “நுழைவாயில் நிகழ்ச்சியாக” இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ஜவுளித்துறையை சேர்ந்த அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த கண்காட்சி உலகத் தரம் வாய்ந்த இந்திய எக்ஸ்போசிஷன் மார்ட் நிறுவனத்தில் கிரேட்டர் நொய்டாவில் நடத்தப்படுகிறது, இதில் ஏராளமான தொழில்நுட்ப மற்றும் ஜவுளி நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்த கண்காட்சி,தொழில்துறையில் உள்ள மிகப்பெரிய மற்றும் சிறந்த எந்திர உற்பத்தியாளர்களுடன் தொடர்பு கொள்வதற்கான அதிகபட்ச சந்தை வாய்ப்புகளை வழங்கும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,

6 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், ஆஸ்திரேலியா,ஆஸ்திரியா,பங்களாதேஷ், பெல்ஜியம்,பிரேசில், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங்,இந்தோனேசியா, ஜப்பான், மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச்சேர்ந்த 1100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 1,50,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என குறிப்பிட்டார்.

மேலும் படிக்க