April 12, 2017 தண்டோரா குழு
1971-ம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த போரின் போது தன்னை காப்பாற்றிய இந்திய கர்ணலுக்கு வங்கதேச பிரதமர் நன்றி கூறினார்.
1971-ம் ஆண்டு நடந்த பாகிஸ்தான்- வங்கேதச போரில் வங்கதேசத்திற்கு ஆதரவாக இந்தியாவும் போரில் ஈடுபட்டது. போரில் உயிரிழந்த இந்திய வீரர்களை கௌரவப்படுத்தும் விதமாக விழா புதுதில்லியில் சனிக்கிழமை(ஏப்ரல் 8) நடைபெற்றது.
அந்த விழாவில் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா பங்கேற்றார். இந்திய பிரதமர் மோடி அவரை வரவேற்றார்.இந்த நிகிழ்ச்சியில் 46 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற கர்ணல் தாராவும் பங்கேற்றிருந்தார். வங்கதேச போரின் போது அவர் பணியாற்றினார். போரின் போது பாகிஸ்தான் படை வங்கதேச பிரதமர் ஹசினாவின் குடும்பத்தினரை சிறை வைத்திருந்தனர். அவர்களை விடுவிக்க தாரா மூன்று ராணுவ வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றார். புத்திசாலிதனமாக கையாண்டு, ஹசினாவின் குடும்பத்தினரை பத்திரமாக காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்விழாவில் பங்கேற்ற வங்கதேச பிரதமர் தாராவை பார்த்து மகிழ்ச்சியடைந்தார். அவருக்கு நன்றியும் கூறினார்.
இது குறித்து தாரா கூறுகையில்
“வங்கதேச பிரதமர் என்னையும் என் மனைவியை பார்த்தது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். கையில் ஆயுதம் இல்லாமல் அன்று தனிமையாக சூழ்நிலையை புத்திசாலிதனமாக கையாண்டு என்னையும் என் குடும்பத்தினரையும் காப்பாற்றினார் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் கூறினார் ” என்றார் கர்ணல் தாரா.