November 17, 2024 தண்டோரா குழு
ரேசிங் புரமோஷன்ஸ் நிறுவனம் நடத்தும் இந்திய கார் பந்தய திருவிழா, கோவை காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நேற்று நடைபெற்றது.
இதில் கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங் அணியைச் சேர்ந்த சோஹில் ஷா முதல் வெற்றியைப் பெற்றார்.இந்திய ரேசிங் லீக்கில் 23 வயதான ஷா பெற்ற முதல் வெற்றி இதுவாகும். மேலும் அவர் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் வந்த மூத்த வீரர்களான ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ் அணியைச் சேர்ந்த நீல் ஜானி மற்றும் ஸ்பீட் டெமான்ஸ் டெல்லியைச் சேர்ந்த அல்வாரோ பேரன்டே ஆகியோரை முந்திச் சென்று முதலிடம் பிடித்தார்.
இருப்பினும்,பேரன்டே 5 வினாடி பெனால்டியில் டாக் செய்யப்பட்டார்.இதன் காரணமாக சென்னை டர்போ ரைடர்ஸ் அணியின் ஜான் லான்காஸ்டர் 3வது இடத்திற்கு முன்னேறினார்.17.156 வினாடி வெற்றி வித்தியாசம், இந்த சீசனில் ஷாவின் சிறப்பான செயல்திறனைக் காட்டுகிறது.நேற்று முன்தினம் மழை பெய்த நிலையில் நேற்று வானம் தெளிவாக காணப்பட்டதால் பந்தயப் பாதை தண்ணீர் இல்லாமல் காய்ந்திருந்தது. இந்தநிலையில் பந்தயம் துவங்கியதில் இருந்தே ஷா சிறப்பாக காரை ஓட்டி ஒவ்வொரு சுற்றையும் சிறப்பாக கடந்தார்.ஒவ்வொரு சுற்றிலும் ஜானி, லான்காஸ்டர் மற்றும் பேரன்டே ஆகியோருக்கு கடும் சவாலாக இருந்தார்.
இதேபோல் கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங் அணிக்கு மேலும் உற்சாகம் அளிக்கும் வகையில், போட்டி துவங்கியபோது 12வது இடத்தில் இருந்த ஷா அணி வீரர் ஷஹான் அலி மொஹ்சின் போட்டியின் இறுதியில் முன்னேறி ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். இருப்பினும், 20 வினாடி பெனால்டியைத் தொடர்ந்து ஷஹான் ஏழாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
இந்த வெற்றி குறித்து ஷா கூறுகையில்,
பல்வேறு போட்டிகளில் நான் பங்கேற்ற நிலையில் இன்று எனக்கு கிடைத்த இந்த வெற்றி குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஜானி, பேரன்டே மற்றும் லான்காஸ்டர் போன்ற சிறந்த வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் பங்கேற்றது எனக்கு மிகுந்த உற்சாகத்தை தருகிறது என்றார்.
இந்தியன் ரேசிங் லீக் (பந்தயம்-1, டிரைவர்-ஏ) 25 நிமிடம்+1 சுற்று: 1. சோஹில் ஷா (இந்தியா, கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங்) (26 நிமிடங்கள், 34.598 வினாடிகள்); 2. நீல் ஜானி (சுவிட்சர்லாந்து, ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ்) (26:51.754); 3. ஜான் லான்காஸ்டர் (யுகே, சென்னை டர்போ ரைடர்ஸ்) (26:54.848). சிறந்த சுற்று : சோஹில் ஷா (01:03.088).
பார்முலா 4 இந்திய ஓபன் (பந்தயம்-1, 25 நிமிடம்+1 சுற்று): 1. அகில் அலிபாய் (தென் ஆப்பிரிக்கா, ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ்) (26:14.474); 2. ருஹான் ஆல்வா (இந்தியா, ஷ்ராச்சி ரர் ராயல் பெங்கால் டைகர்ஸ்) (26:15.614); 3. ஹேடி நோவா மிமாசி (கனடா, சென்னை டர்போ ரைடர்ஸ்) (26:17.254). சிறந்த சுற்று: மிமாசி (01:10.638).
ஜேகே டயர்-எப்எம்எஸ்சிஐ தேசிய ரேசிங் சாம்பியன்ஷிப்:
எல்ஜிபி பார்முலா 4 (பந்தயம்-1, 15 சுற்றுகள்): 1. டிஜில் ராவ் (பெங்களூரு, டார்க் டான் ரேசிங்) (22:02.750); 2. சரண் விக்ரம் டிமார்ஸ் (சென்னை, மொமென்டம் மோட்டார்ஸ்போர்ட்ஸ்) (23:03.725); 3.துருவ் கோஸ்வாமி (பெங்களூரு, எம்ஸ்போர்ட்) (23:04.504). புதுமுகம்: 1. துருவ் கோஸ்வாமி (23:04.504); 2. அபய் மோகன் (பெங்களூரு, 23:06.147); 3. நெய்தன் மெக்பெர்சன் (புனே, மொமண்டம் மோட்டார்ஸ்போர்ட்ஸ்) (23:08.494).
ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி கோப்பை (பந்தயம்- 1, 9 சுற்றுகள்) – : 1. ரோஹன் ஆர் (கோயம்புத்தூர்) (11:44.984); 2. நவநீத் குமார் எஸ் (புதுச்சேரி) (11:45.320); 3. அனிஷ் ஷெட்டி (பெங்களூரு) (11:45.470). அமெச்சூர்: 1. யோகேஷ் பி (பெங்களூரு) (12:16.480); 2. ஜோஹ்ரிங் வாரிசா (உம்ராங்சோ) (12:16.891); ஜான்சன் சல்தான்ஹா (மங்களூரு) (12:22.450).
பந்தயம் – 2 (6 சுற்றுகள்) – புரொபஷனல் : 1. நவநீத் குமார் எஸ் (07:48.397); 2. அனிஷ் ஷெட்டி (07:50.894); 3. ரோஹன் ஆர் (07:51.227). அமெச்சூர்: 1. யோகேஷ் பி (பெங்களூரு) (08:08.594); 2. ஜோஹ்ரிங் வாரிசா (08:10.664); 3. ஜான்சன் சல்தான்ஹா (08:21.798).