July 11, 2017 தண்டோரா குழு
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிகெட் அணியின் பயிற்சியாளராக இருந்த அணில் கும்ப்ளே கடந்த மாதம் ராஜினாமா செய்தார். இதையடுத்து, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி, சேவாக், மூடி, பைபஸ், டொட்டா கணேஷ், ராஜ்புத், குளூஸ்னர், ராகேஷ் சர்மா, பில் சிம்மன்ஸ், உபேந்திர பிரம்மச்சாரி ஆகியோரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தலைமை பயிற்சியாளருக்கான நேர்காணல் நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திரங்களான சச்சின், கங்குலி மற்றும் விவிஎஸ் லட்சுமன் ஆகியோர் அடங்கிய குழு நேர்காணலை நடத்தியது.
இந்நிலையில், கேப்டன் கோலியுடனான ஆலோசனைக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2019 உலக கோப்பை வரை பயிற்சியாளராக இருப்பார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.