April 26, 2022 தண்டோரா குழு
இன்றைய தினத்தில் இந்தியா ஸ்டேட் நிறுவனம் “இந்திய தேர்தல்களின் வரைபடம்” என்ற அச்சு படைப்பை அதன் இணை நிறுவனரும் மற்றும் இயக்குனருமான முனைவர் திரு ஆர். கே. துக்ரால் அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்டது. இதன் ஒரு பிரதியை இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையாளர் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பேசிய இந்த படைப்பினுடைய தொகுப்பாளரும் வெளியீட்டாளருமான ஆர். கே. துக்ரால்,
இந்தியா ஸ்டேட் வெளியிடப்பட்ட முந்தய பதிப்பு அனைத்து தரப்பு மக்களிடம் அமோக வரவேற்பு பெற்றதால் நாங்கள் இந்த புதிய 2019 ஆம் ஆண்டு “இந்திய தேர்தல்களின் வரைபடம்” புதிப்பிக்கப்பட்ட பதிவை உருவாக்க ஊக்கமூட்டும் வகையில் அமைந்தது என்று கூறினார்.
சுமார் 912 மில்லியன் வாக்காளர் மக்கள் தொகை என்பது, ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் இணைந்த வாக்களர் மக்கள் தொகையோடு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பத்து ஆண்டுகளில் பெருகி வரும் தேர்தல் மாற்றங்களில் ஆய்வு செய்யப்பட்டு தொகுத்தளிக்கப்பட்ட இந்தியா ஸ்டேட் அளித்த “இந்தியாவின் தேர்தல் வரைபடம்” ஓர் இன்றிமையா அறிவுச்சார் படைப்பாகும் என்பதனை எடுத்துரைத்தார்.
ஐக்கிய நாடுகளின் ஜனநாயக நிதி நிறுவனுமும், உலக தேர்தல்களின் கூட்டமைப்பு, அணிசேரா நாடுகளின் பாராளுமன்ற கூட்டமைப்பு, சர்வதேச ஜனநாயக மற்றும் தேர்தல் உதவி குழு, ஐரோப்பாவின் அரசியல் ஆலோசனை கூட்டமைப்பு, பேராசியர் பிப்பா நோரிஸ் (ஹார்வர்ட் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் நிபுணர்) போன்ற அமைப்புகளும் அறிவு சார் உலகமும் தங்கள் பாராட்டுகளை கடிதங்கள் வாயிலாக தெரிவித்துள்ளது.
இந்திய தேர்தல்களின் வரைபடம் என்ற இத்தொகுப்பு காலக்குறிப்போடு முறைவடிவம் பெற்ற ஓர் பதிப்பாகும். படிப்போர் பயனடையும் வண்ணம் இந்திய பாராளுமன்ற தேர்தல்களின் தொகுப்பை, வரலாற்று ஆவண புகைப்படங்களும், புள்ளிவிவர வரைபடங்களும், சுருக்கமான குறிப்புரைகளும் கொண்டவைகளாக அமைந்துள்ளது. மேலும் இந்த பதிப்பானது மக்களவை தேர்தல்களில் தொகுதி குறிப்புகளும், மாற்றங்களும், மறுசீரமைப்புகளையும் விரிவாக ஆராய்ந்து மாணவர், ஆய்வாளர் போன்ற அத்துனை சமூகங்களும் பயன் பெரும் வண்ணம் அமைந்துள்ளது என்பது இதன் அறியவைகளாகும்.