July 29, 2017 தண்டோரா குழு
இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலிராஜுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையும் மற்றும் 600 சதுர அடி அளவில் வீடு வழங்கப்படும் என்று தெலங்கானா முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் ஐசிசி உலக கோப்பை கிரிகெட் போட்டி கடந்த ஜூலை 23ம் தேதி நடந்தது. அந்த போட்டியில் இங்கிலாந்து அணியும் இந்திய அணியும் மோதியது. ஆனால், இந்திய அணி 9 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இருப்பினும், இந்திய மகளிர் அணிக்கு பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்திய மகளிர் கிரிகெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜு, தனது சொந்த ஊரான ஹைதராபாத் நகருக்கு வெள்ளிக்கிழமைமாலை வந்து சேர்ந்தார். ஹைதராபாத் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஹைதராபாத்துக்கு வந்ததும், முதல் வேலையாக தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவை மித்தாலி ராஜு சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கும் அவருடைய பயிற்சியாளர் ஆர்எஸ்ஆர் மூர்த்திக்கும் பொன்னாடை போர்த்தப்பட்டது. அப்போது, மித்தாலிக்கு 1 கோடிரூபாய் ஊக்கத்தொகையும், ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில் பகுதியில் 600 சதுர அடி வீடும் வழங்கப்படும் என்றும், பயிற்சியாளர் ஆர்எஸ்ஆர் மூர்த்திக்கு 25 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 6000 ரன்கள் எடுத்த முதல் பெண் கிரிகெட் வீரர் என்றும், ஐசிசி உலக கோப்பையின் இறுதி போட்டிக்கு இந்திய அணியை கொண்டு சென்றதற்கா தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய மகளிர் அணி அருமையாக விளையாடியது என்றும் அவர்களுடைய விளையாட்டை அவரும் பார்த்து ரசித்ததாக தெரிவித்தார். மித்தாலிக்கு அருமையான திறமை இருக்கிறது. எதிர்காலத்தில் இன்னும் அதிகமான போட்டியில் விளையாடி வெற்றிபெற வேண்டும். தெலங்கானா மற்றும் ஹைதராபாத்துக்கு பெருமையை சேர்த்திருக்கிறார். தெலங்கானா மாநிலத்தின் சார்பாக, தனது மனமாரத வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.