April 28, 2023 தண்டோரா குழு
11 லட்சம் ரயில்வே தொழிலாளர்களை அங்கத்தினர்களாக கொண்ட அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சங்கமேளம் ரயில்வே அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகும். கடந்த 1923 ஆம் ஆண்டு துவங்கிய இந்த அமைப்பு நூறாண்டு காலமாக ரயில்வே துறையில் தொழிலாளர்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த அமைப்பு தனது நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை கொண்டாடி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையத்தில் எஸ்.ஆர்.எம்.யூ.அலுவலகத்தில் நூற்றாண்டு விழா என்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. எஸ்.ஆர்.எம்.யூ. வின் சேலம் கோட்ட செயலாளர் கோவிந்தன் நிர்வாகிகள் மத்தியில் கேக் வெட்டி கொண்டாடினார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ரயில்வேயில் 70 சதவீதம் ஊழியர்கள், அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சங்கமேளத்தின் ஊழியர்கள் ஆகும். தாராள மைய கொள்கையை மத்திய அரசாங்கம் கடைபிடித்து வருவதால் மத்திய அரசு ஊழியர்கள் கடமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.ரயில்வேயில் தனியார்மயம் வரக்கூடாது.பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 100வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு பல்வேறு போராட்டங்களை ஓராண்டு முழுவதும் முன்னெடுக்க உள்ளோம்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டம் தொழிலாளர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.ரூ.1600 பென்சன் பணத்தை வைத்துக் கொண்டு ஒரு சாதாரண தொழிலாளியாய் எப்படி வாழ்க்கையை நடத்த முடியும்.ரயில்வே தொழிலாளர் தங்களுடைய ஓய்வு நாளை நிம்மதியாக கழிக்க முடியாத நிலைதான் காணப்படுகிறது.11 லட்சம் ஊழியர்கள் ஒர் ஆண்டு முழுவதும் போராட்டங்களை மேற்கொள்வ்வார்கள். ஒரு வருடத்திற்கு கிளை கூட்டம் வாரியாக நூறாவது ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.