June 24, 2017
தண்டோரா குழு
இந்தி இல்லாமல் நாட்டின் வளர்ச்சியே இல்லை என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.
சபர்மதி் ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர்,
இந்தி மொழி இந்தியர்களின் அடையாளம். இந்தி தான் தாய்மொழி. நமது தாய்மொழியை கற்றுக் கொள்வதுடன் அதனை மேம்படுத்தவும் வேண்டும். இதற்காக நாம் பெருமைப்படவேண்டும்.
நான் ஆங்கிலேயர்களுக்கு எதிரானவன் தான் அவர்களது மொழிக்கு எதிரானவன் இல்லை. அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும்.
நாம் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளும்போது, நம்மை ஆங்கிலேய மக்கள் போல நினைத்துக் கொள்கிறோம். இது நாட்டின் நலனுக்கு நல்லது அல்ல. இந்தி நமது தேசிய மொழி. அது இல்லாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமே இல்லை என்றார்.
மேலும், வேலைவாய்ப்புக்காக ஒவ்வொருவரும் ஆங்கிலம் கற்றுக் கொள்ளவேண்டும் என எண்ணுவது துரதிர்ஷ்டவசமானது. அதே நேரம் இந்தியை கற்றுக் கொள்ளவேண்டும். இதுபற்றி தேசிய அளவில் விவாதம் வேண்டும் என நான் விரும்புகிறேன் என்றார்.