April 28, 2017
தண்டோரா குழு
தமிழகம் முழுவதும் இந்தி எதிர்ப்பு தீ பரவிட மாநிலம் முழுவதும், மாவட்டந்தோறும் கருத்தரங்கம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் இன்று நடைபெற்ற தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்;
தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக தலைமையில் அனைத்து கட்சி சார்பில் நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி.
மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர நடத்தப்படும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது தொடர்பான தீர்மானத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும்.
மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சியை எதிர்த்து இந்தி எதிர்ப்பு தீ பரவிட மாநிலம் முழுவதும், மாவட்டந்தோறும் கருத்தரங்கம் நடத்துவது. தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு, டாஸ்மாக் ஊழியருக்கு மாற்று வேலை தர வேண்டும்.
தமிழகத்தில் விவசாய பிரச்னையை தீர்க்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சி காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது.
தமிழகத்தில் தற்போது மிக முக்கிய பிரச்னையான குடிநீர் பிரச்னையை போக்க அரசு போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். வைர விழா காணும் திமுக தலைவர் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தல் ஆகிய தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.