October 26, 2021 தண்டோரா குழு
தமிழக அரசின் கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்து முன்னனியினர் கண்டன ஆர்ப்பாடம் நடத்தினர்.
இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள முனியப்பன் கோவில் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் அலகு குத்தி ஆண்டி வேடமணிந்து குழந்தைகளுக்கு கடவுள் மற்றும் பாரத மாதா வேடமணிந்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் தமிழக அரசின் கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், என வலியுறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுய மாநில செயலாளர் கிஷோர் கூறுகையில்,
தமிழக அரசு தொடர்ந்து இந்து விரோத போக்கை கடைபிடித்து வருவதாக தெரிவித்தார். பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் இருப்பதால் தமிழக அரசின் இந்தத் திட்டத்தில் ஊழல் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். எனவே இந்த திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் எனவும், இல்லையெனில் பெரிய அளவிலான போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
ஒரு கால பூஜை கூட நடைபெறாத கோவில்கள் பல உள்ளதாகவும் அதனை சரி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் இந்த திட்டத்தை தமிழக அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும் என தெரிவித்தார். மேலும் இந்துத்துவா அமைப்புகளை முதல்வர் சந்திக்க மறுப்பதாகவும் கூறினார்.