July 4, 2022 தண்டோரா குழு
கோவை காந்திரம் பகுதியில் உள்ள இந்துஸ்தான் அன்ட் கோ நிறுவனம், நிப்பான் பயின்ட் மற்றும் ரோட்டரி கோயமுத்தூர் எலைட் இணைந்து இலவச மரக்கன்று வழங்கும் விழாவை நடத்தியது. இவ்விழாவில் பொதுமக்களுக்கு இலவசமாக 500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், இந்துஸ்தான் அன்ட் கோ நிறுவத்தின் உரிமையாளர் பிரோஸ்தீன், ரோட்டரி கோயமுத்தூர் எலைட் தலைவர் ஜெகதீஸ்வரன், நிப்பான் பயின்ட் மண்டல மேலாளர் பிரமோத் குமார், நிப்பான் பயின்ட் தலைமை விற்பனை மேலாளர் ராகுல்,ரோட்டரியன்ஸ் அறிவுடைநம்பி, மயூர் கிக்கானி, சுரேஷ் பர்ஜான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து இந்துஸ்தான் அன்ட் கோ நிறுவத்தின் உரிமையாளர் பிரோஸ்தீன் கூறுகையில்,
கோவை மாவட்டம் ஸ்மார்ட் சிட்டி அறிவித்த நிலையில், சுற்றுச்சூழலிலும் ஸ்மார்ட் ஆக இருக்க வேண்டும் எனவே, அதிகமாக மரக்கன்றுகளை நடவு செய்து பேணி பாதுகாக்க வேண்டும். இந்துஸ்தான் அண்ட் கோ நிறுவனம் பல்வேறு சேவைகளை நிப்பான் பெயிண்டுடன் இணைந்து செய்து வருகிறது.
தற்போது ரோட்டரி கிளப்புகளுடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியில் முதல் கட்டமாக 500 மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி உள்ளோம் மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகளை பொது மக்களுக்கு இலவசமாக வழங்கியும் அதனை பாதுகாக்க முயற்சி ஈடுபடுவோம் என்றார்.