December 31, 2016 தண்டோரா குழு
இந்தோனேசியாவில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 3௦) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது குறித்து அமெரிக்க நாட்டின் புவியியல் ஆய்வு மையத்தின் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவுக்கு அருகில் உள்ள தென்மேற்கு சும்பா மாவட்டத்தின் கிழக்கு நுசா டெங்காரா உள்ளது. அவ்விடத்தில் உள்ளூர் நேரத்தின்படி அதிகாலை 5.3௦ மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
டெங்காராவுக்கு தெற்கே 59 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்த இந்த பூகம்பம் 91 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இது 6.2 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் அங்கு உயிர்ச் சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை. இந்த பூகம்பத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.