• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தோனேசிய தீவுகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் 12 பேர் பலி

February 10, 2017 தண்டோரா குழு

இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுகளில் பெய்து வரும் கன மழையால், அத்தீவில் ஏற்பட்ட மூன்று நிலச்சரிவில் 12 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து இந்தோனேசிய நாட்டின் பேரழிவு தடுப்பு நிறுவனத்தின் அதிகாரி வெள்ளிக்கிழமை கூறுகையில்,

“பாலி தீவில் உள்ள மவுண்ட் படூர் என்னும் எரிமலை அடிவாரத்தில் கின்ட்டாமனி மாவட்டம் உள்ளது.

அம்மாவட்டத்தில் உள்ள மூன்று கிராமங்களில் இருந்த வீடுகள் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சேதமடைந்தன. அதில் ஒரு வயது சிறுவன் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்” என்றார்.

தேசிய பேரிடர் தடுப்பு நிறுவத்தின் அதிகாரி கூறுகையில், “இச்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்” என்றார்.

“பாதிக்கப்பட்ட மக்களை அவ்விடத்திலிருந்து வெளியேற்றியுள்ளோம். அப்பகுதியில் கடும் மழை பெய்து வருகிறது. அங்குள்ள செங்குத்தான சரிவுகளில் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது. அதனால், அந்த இடங்களில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளோம்” என்று அங்கிருந்த அதிகாரி இந்திரா கலக் கூறினார்.

“பாலித் தீவுகளில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மழை தொடரும் என்று தேசிய வானிலை நிறுவனம் அறிவித்துள்ளது” என்றார்.

மேலும் படிக்க