• Download mobile app
22 Nov 2024, FridayEdition - 3208
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இனி வாட்ஸ்ஆப் குரூப் துவங்க அனுமதி வேண்டும்.

April 19, 2016 வெங்கி சதீஷ்

தலைப்பைப் பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். அது இங்கல்ல காஷ்மீரில். காஷ்மீர் எப்போதுமே பதட்டம் நீடிக்கும் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

அங்கு ஏதாவது ஒரு காரணத்திற்காக திடீர் திடீர் எனப் போராட்டங்கள் வெடித்து வருகிறது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் முற்றிலும் குறைந்து வருவாய் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தக் கலவரங்களுக்கு காரணம் தேடிய பொது அது சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகளும், கலவரத்தைத் தூண்டும் விதமாகப் பரப்பப்படும் செய்திகளுமே எனக் கண்டறியப்பட்டது.

இதையடுத்து காஸ்மீர் நிர்வாகம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அதில் தற்போது வாட்ஸ்ஆப் குரூப் வைத்திருந்தாலும் சரி, இனி புதிதாக துவங்கினாலும் சரி இனி அரசின் அனுமதி பெறவேண்டும் என உத்தரவு போடப்பட்டுள்ளது.

இது குறித்து நேற்று கோட்ட ஆணையாளர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், இனி வாட்ஸ்ஆப் செய்தி வெளியீட்டாளர்கள் இனி அனுமதி பெற்றே செய்தியை வெளியிடவேண்டும்.

குறிப்பாகச் செய்தி வெளியிடத் துணை ஆணையாளர்களிடம் அனுமதி வாங்கவேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளதாகவும், அதற்கு முன் வாட்ஸ் ஆப் குரூப் துவங்க இனி நீதிபதியிடம் அனுமதி பெறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இது போன்ற அனுமதி பெறாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளதோடு, அவர்களது இணைப்பும் துண்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தேவையற்ற வதந்திகள் பரவுவது தடுக்கப்படும் என காஷ்மீர் நிர்வாகம் நம்புவதாகக் கூறும் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் இனி அரசு திட்டங்களை கிண்டலடிப்பதோ அல்லது அதன் மீது விமர்ச்சனம் செய்வதோ கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வதந்திகள் பரவினால் அதற்கு குரூப் அட்மின் தான் பொறுப்பு எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க