August 18, 2017
தண்டோரா குழு
இன்ஃபோசிஸ் இடைக்கால இயக்குநராக யு.பி.பிரவீன் ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரும், தலைமை நிர்வாக திகாரியுமான விஷால் சிக்கா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இடைக்கால இயக்குநராக யு.பி.பிரவீன் ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து அதிகளவில் மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் 2ஆம் இடத்தை இன்போசிஸ் வகிக்கிறது.இந்நிலையில் அந்த நிறுவனத்தின் பங்குகள் 4 சதவீதம் இன்று குறைந்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.