April 19, 2017
தண்டோரா குழு
சமூக வலைதள அப்ளிகேஷனான இன்ஸ்டாகிரம் தற்போது ஆப் லைன் மோட் எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இணையதள வசதி இல்லாமல் இன்ஸ்டாகிரமை பயன்படுத்த முடியும்.
உலகில் அதிக பயனாளர்களை கொண்டுள்ள பேஸ்புக் நிறுவனத்தின் சமூக வலைதள அப்ளிகேஷன் தான் இன்ஸ்டாகிராம். இந்த அப்ளிகேஷன் பிரத்யேகமாக புகைப்பட விரும்பிகளுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புகைப்படங்களை பகிர்தல், நேரடி வீடியோ போன்றவையை நண்பர்களுக்கு பகிர முடியும். இதுவரை இந்த அப்ளிகேஷனை பயன்படுத்த இணையதள வசதி தேவைப்பட்டது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம், தற்போது ஆப் லைன் மோட் எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இணையதள வசதி இல்லாத போதும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த முடியும். மேலும், புகைப்படங்களை பார்த்து ரசிக்கவும் லைக் செய்யவும் அவைகளுக்கு கமென்ட் செய்யவும் முடியும்.