• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இன்றைய விவசாயமும் இளைஞர்கள் பங்களிப்பும்

January 31, 2022 பா. ஸ்ருதி

நமது தேசத்தின் முதுகெலும்பான விவசாயம் எப்படி இருக்கிறது? நமக்கு பசியாற்றும் விவசாயின் நிலை என்னவாக இருக்கிறது? மண்ணை அழுக்கு என்று சொல்லி குடுக்கும் நமக்கு மத்தியில் சேற்றில் நினைந்த கால்களோடு நடைபோடும்அவர்களின் வாழ்க்கை சிந்தனை என்ன? இப்படி எல்லாம் நம்ம என்றாவது யோசிச்சு இருக்கோமா?

அவர்கள் தெருவில் வந்து போராட்டம் செய்வது மட்டுமே நம் கண்களுக்கு தெரிகிறது. ஆனால், பல காலங்களாக உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் சாகுபடி செய்யும் புரட்சியை காணவில்லை என்பதே உண்மை.இப்பொழுது பலவிதமான தொடர்பு தொழில்நுட்பம் வாயிலில் நம்மால் விவசாயிகளின் அவலங்களை வெளிச்சம் போட்டு காட்ட முடிகிறது.அவர்களின் பாவப்பட்ட நிலையை பேசும் நாம், என்றாவது அவர்களுக்கு பாக்கபலமாக இருக்கிறோமா என்று பார்க்க வேண்டாமா? இப்பொழுதும், நமது விவசாயிகள் போராட வேண்டிய நிலை நிலைத்தே இருக்கிறது. அவர்களின் வாழ்வாதாரம், பொருட்களுக்கான விலை நிர்ணயம், பலவிதமான வேளாண் சட்டங்கள் என நிறைய குறிப்பிடலாம். இதற்க்கு நாம் ஆற்றும் பங்கு என்ன?

இளம் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடாக இந்தியா இருக்கிறது. இளைஞர்கள் மாபெரும் சக்தி என்று எல்லாம் நாம் சொல்கிறோம். அவர்கள் ஒன்றிணைந்தால் விவசாயத்தை காப்பாற்றுவது சாத்தியம் தானே?இன்றைய இளைஞர்கள் பலபேர் அவர்களை விவசாயத்தில் இணைத்து வருகிறார்கள்.வேளாண் கல்லூரிகளில் பெண்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது.ஆனால், சிறு குறு விவசாயிகள் அவர்களின் அடுத்த தலைமுறையை விவசாயத்தில் நுழைக்க தயங்குவதே நிதர்சனம். சுதந்திரப் போராட்ட காலம் முதல் இன்று வரை போராடி காக்கப்பட்டு வரும் விவசாயம் மெல்ல அதன் அழிவை நோக்கி செல்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

இதைப்பற்றி கார்த்திகேயன், பட்டதாரி இயற்கை விவசாயிடம் கேட்டபோது,

“பல காலங்களாக எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் போராட்ட குணத்துடன் சாகுபடி செய்யும் விவசாயிகள் அவர்கள் பிள்ளைகளும் இந்த கஷ்டத்தை அனுபவிக்க வேண்டாம் என்று நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லை. பெற்றோர்களின் மனம் அப்படித்தானே யோசிக்கும்.

இதற்கான தீர்வு, அவர்களுக்கு நாம் விவசாயம் லாபாகரமான தொழில், சரியாக முறைப்படி செய்தால் வருமானம் இருக்கும் என்று உணர்த்த வேண்டும். இதற்காகத்தான் பொறியியல் படித்தாலும், நானும் எனது சில நண்பர்களும் இணைந்து விவசாயம் செய்து வருகிறோம். எங்களை முன்மாதிரி நிறுத்தி விவசாயத்தில் இளைஞர்களை இணைப்பதே எங்களின் கடமையாக பார்க்கிறோம். சிறு குறு விவசாயிகளாக இருந்தாலும், சிறிது ஏக்கர் நிலத்தில் லாபம் ஈட்டலாம் என்று காட்ட விரும்புகிறோம்.

ஆரம்ப கட்டத்தில் சிறிது தயக்கம் இருந்தது. வாகனம், கணினியை விற்று விவசாயம் தொடங்கினோம். வருமானம் பார்க்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. அப்போது ஈஷா அறக்கட்டளையின் வேளாண் உற்பத்தி மையத்தின் சாதனை செய்திகள் எங்களுக்கு ஊக்கமாக அமைந்தது. இயற்கை விவசாயத்தின் மூலம் லாபம் காணலாம் என்ற நம்பிக்கை உருவாகியது.

தற்போது, இரண்டு நண்பர்கள் தொடங்கிய எங்கள் விவசாயத்தில் வருமானம் வருவதை கண்டு எங்களுடன் படித்த ஆறு நண்பர்கள் இணைந்துள்ளார்கள். இதுவும் ஒருவிதமான பக்ரி சம்பால் ஜட்டா இயக்கம் (Pagri Sambhal Jatta Movement) தான். பஞ்சாப் சிங்கம், லாலா லஜ்பத் ராய் பாதையில், நாங்கள் விவசாயத்திற்கு செய்யும் ஆரோக்கியமான போராட்ட நெறிமுறை.” என்று கூறிமுடித்தார்.

மேலும் படிக்க