November 18, 2022 தண்டோரா குழு
இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சாகச முகாம் நிறைவு பெற்றதையடுத்து, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கோவை திரும்பினர்.
மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில், இமாச்சல பிரதேசத்தில் உள்ள நார்கண்டா பகுதியில், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கான தேசிய அளவிலான 10 நாள் சாகச முகாம். நவம்பர் 6-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து 70 பேர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து 30 பேர் கலந்து கொண்டனர்.
இவர்களில் 10 பேர் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் பங்கேற்றனர். இவர்களுக்குத் தலைவராக, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் எஸ்.பிரகதீஸ்வரன் நியமிக்கப்பட்டு உடன் சென்றார்.
முகாமில் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள், மாணவர்களுக்கு மலையேற்றப் பயிற்சி, மலைப் பகுதிகளில் ஏற்படும் விபத்துகளில் மீட்புப் பணியில் ஈடுபடுதல், மலைப் பகுதிகளில் நடைப்பயிற்சி, மலைப் பகுதிகளில் கூடாரம் அமைத்து தங்குதல் உள்ளிட்ட அளிக்கப்பட்டன. பல்வேறு பயிற்சிகள் மாணவர்களுக்கு
முகாம் முடிந்து வரும் வழியில் புதுடெல்லியில் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் முனைவர் எல்.முருகன் அவர்களை, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதன்பின்னர் கோவை திரும்பினர்.