• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இயக்குநர் ராஜமௌலி மீது காவல்நிலையத்தில் புகார்!

May 2, 2017 தண்டோரா குழு

பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி மீது குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்கள், படத்தில் தங்கள் சாதியை அவர் இழிவுப்படுத்தி விட்டதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பிரமாண்டமான படமான பாகுபலியை படத்தை இயக்கியவர் இயக்குநர் ராஜமௌலி, இவரது இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி 2 படம் 4 நாட்களில் 600கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இவர்மீது அரீகதிகா பொரடா சமிதி வாழ் உறுப்பினர்கள் பஞ்சாராஹில்ஸ்காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதில், ராஜமௌலி எங்கள் சமூகத்தைச் சார்ந்தவர்களை திரைப்படத்தில் தவறாகச் சித்திரித்துள்ளார். பாகுபலி 2 படத்தில் நடிகர் சத்யராஜ்ஓர் இடத்தில் ‘கதிகா சீக்கட்டி’ என்று சொல்வார். இது எங்கள் சமூகத்தில் உள்ளவர்களைப் புண்படுத்துவதாக உள்ளது. அது மட்டுமின்றி இது எங்கள் சாதியை ஒடுக்குவதற்குச் சமம்.

நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தின் ஒரு பகுதியாக கால்நடைகளை விற்பனை செய்வது சத்தான உணவை உண்பதற்காகவே.அது இன்றி திரைப்படத்தில் கூறியிருப்பது போல் நாங்கள் மனிதாபிமான மற்ற சமுகவிரோதிகள் இல்லை.

அதனால், சென்சார் போர்டு உடனடியாக கதிகா என்ற வார்த்தையைப் படத்திலிருந்து நீக்க வேண்டும், என்று பபுகார் மனுவில் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க