• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இயற்கை மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் அஜினோமோட்டோ பாதுகாப்பானது!

October 5, 2021 தண்டோரா குழு

ஜப்பானின் அஜினோமோட்டோ குழுமத்தோடு இணைந்த ஒரு நிறுவனமான அஜினோமோட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட், உயர்தர சீசனிங் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தயாரித்து வழங்கிவருகிறது. 127-க்கும் அதிகமான நாடுகளில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்துவரும் அஜினோமோட்டோ குழுமம் 110 ஆண்டுகள் பழமையான நிறுவனமாகும்.

அமினோ அமில தொழில்நுட்பங்களின் விரிவான பயன்பாட்டின் வழியாக இந்தியாவில் உணவு கலாச்சாரம் மற்றும் மானுட ஆரோக்கியத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு அஜினோமோட்டோ இந்தியா நிறுவனம் செயலாற்றி வருகிறது. 2003ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமையகம்,தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்திருக்கிறது.தற்போது இந்நிறுவனம், அதன் தயாரிப்புகளை பிரதானமாக தென்னிந்திய மாநிலங்களில் விற்பனை செய்துவருகிறது. வட-இந்திய மாநிலங்களிலும் மற்றும் வட-கிழக்கு மாநிலங்களிலும் இதன் வினியோக வலையமைப்பை இது விரிவாக்கம் செய்துவருகிறது.

அஜினோமோட்டோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் இஷிகாவா-கட்சுயுகி கூறியதாவது:

கரும்பு அல்லது மரவள்ளிக்கிழங்கு போன்ற இயற்கை தாவர பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு உமாமி சீசனிங் கலவைப் பொருளாக, இயற்கையான நொதிப்பு செய்முறை வழியாக அஜினோமோட்டோ தயாரிக்கப்படுகிறது. நொதிப்பித்தல் என்பது, வீட்டில் நாம் பாலிலிருந்து எப்படி தயிரை தயாரிக்கிறோமோ அதுபோன்ற ஒரு இயற்கை செய்முறையாகும்.

ஆகவே, அதுபோன்று தயாரிக்கப்படும் அஜினோமோட்டோவில் எவ்வித செயற்கையான செயல்பாடுகளோ, செயற்கை பொருட்களோ இல்லை. சமைக்கும் உணவின் சுவையை இன்னும் மேம்படுத்துவதற்கு அஜினோமோட்டோ சிறப்பான பங்களிப்பை வழங்குகிறது. மிகவும் சுவையான உமாமி சுவையை இது தருகிறது. உமாமி என்பது ஐந்தாவது அடிப்படை சுவையாகும். இறைச்சி சார்ந்த சுவை என இது வர்ணிக்கப்படுகிறது. வெங்காயம், காலான், பாலாடைக்கட்டி, சுரைக்காய் போன்ற பல்வேறு ஆதாரங்களில் இயற்கையாக கிடைக்கக்கூடிய குளூடாமிக் அமிலத்தின் இயற்கையான சுவையே உமாமி சுவை எனப்படுகிறது. குளூடாமிக் அமிலம் என்பது வேறொன்றும் அல்ல சமைக்கும் பொருளின் சுவையை அதிகரிக்க பங்களிப்பு வழங்கும் ஒரு அமினோ அமிலமே இது.

அஜினோமோட்டோவின் பாதுகாப்பு தன்மை, உலகளவில் புகழ்பெற்ற அனைத்து உணவு கட்டுப்பாடு ஒழுங்குமுறை அமைப்புகளாலும் திரும்பத்திரும்ப உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. FSSAI, USFDA, JECFA, புட் சேஃப்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றை சிலவாகும். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், எந்தவொரு உணவு ஒழுங்குமுறை அமைப்புகளாலும் நுகர்வுக்கான அளவைப் பொறுத்தவரை எந்தவொரு வரம்பும் (தினசரி உட்கொள்வதற்குரிய வரம்பு அளவு) குறித்துரைக்கப்படவில்லை. எனவே, எவ்வித கவலைகளும் இல்லாமல் இந்த அற்புதமான உமாமி சுவையை எந்தவொரு வயதுப்பிரிவைச் சேர்ந்த மனிதர்களும் அனுபவித்திடலாம்.

இதுகுறித்து அஜினோமோட்டோ இந்தியாவின், சந்தையாக்கல் மேலாளர் கோவிந்த பிஸ்வாஸ், கூறும்போது :-

நாம் உட்கொள்ளும் உப்பின் அளவை கணிசமாக குறைக்க நமக்கு உதவுவதே அஜினோமோட்டோவை பயன்படுத்துவதன் மிக முக்கிய பலனாகும். நமது வழக்கமான உணவுகளில் எம்எஸ்ஜி-ஐ (MSG) சேர்ப்பது, உப்பின் அளவை ஏறக்குறைய 37 சதம் வரை குறைக்க நமக்கு உதவும். ஏனெனில், வழக்கமான உப்போடு ஒப்பிடுகையில் அதன் சோடிய செறிவில் மூன்றில் ஒரு பங்கே எம்எஸ்ஜி-யில் (MSG) இருக்கிறது. தற்போதைய இந்திய உணவுமுறை பழக்க-வழக்கத்தையும் மற்றும் உயர் இரத்த அழுத்த பாதிப்புள்ளவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதையும் கருத்தில் கொள்ளும்போது இந்திய நுகர்வோர்களுக்கு அஜினோமோட்டோ எனப்படும் எம்எஸ்ஜி நிச்சயமாக ஆதாயமளிப்பதாக இருக்கும்.

சமூக பொறுப்புறுதியுள்ள நிறுவனமாகவும் இருப்பதால், அஜினோமோட்டோ குழுமம், கார்பன் உமிழ்வுகளை குறைக்கிற மற்றும் சுற்றுச்சூழலுக்கு அதிக தோழமையான உற்பத்தி செயல்முறைகளை நடைமுறைப்படுத்துவது மீது இப்போது சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது, என்று கூறினார்.

சந்தையிலிருந்து கலப்படம் செய்யப்பட்ட அல்லது எம்எஸ்ஜி போன்று போலியாக லேபிளிடப்பட்ட தயாரிப்புகளை வாங்குவதை தவிர்த்து நுகர்வோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில், இந்த போலி பிராண்டுகளில் பெரும்பாலானவையில் தூய்மையற்ற மாசுக்களும், அழுக்குக்களும் இருக்கின்றன. அத்துடன், இந்தியாவில் FSSAI அமைப்பின் ஒப்புதலை இவைகள் கொண்டிருப்பதில்லை. எனவே, உங்களின் சிறப்பான பாதுகாப்புக்கு FSSAI ஒப்புதல் பெற்ற ஒரிஜினல் ரெட் பௌல் அஜினோமோட்டோவை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும், என்று இஷிகாவா-கட்சுயுகி மேலும் கூறினார்.

பிரபல உணவுமுறை நிபுணரான, டாக்டர். தாரிணி கிருஷ்ணன் பேசுகையில்,

இயற்கை மூலப்பொருட்களிலிருந்து இது உற்பத்தி செய்யப்படுவதால் மோனோ சோடியம் குளூட்டாமேட் மனிதர்களுக்கு மிகவும் பாதுகாப்பானது. எம்எஸ்ஜி என்பது, நீர், சோடியம் மற்றும் குளூட்டாமேட் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சுவையூட்டியாகும். நாம் உட்கொள்கிற உணவுக்கு ஊட்டச்சத்து மதிப்பையும் இது சேர்த்து தருகிறது. எம்எஸ்ஜி -ஐ பயன்படுத்துவதன் மூலம் உணவின் சுவையை நம்மால் சிறப்பாக மேம்படுத்த இயலும். அதே நேரத்தில் அதிலிருந்து கிடைக்கக்கூடிய பல ஆரோக்கிய பலன்களையும் நம்மால் பெறமுடியும், என்று கூறினார்.

மேலும் படிக்க