March 23, 2017 தண்டோரா குழு
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சசிகலா அணியில் டி.டி.வி. தினகரனும், பன்னீர்செல்வம் அணியில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். கட்சியின் சின்னமான இரட்டை இலை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என இரு தரப்பினரும் தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.
இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி , ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து நஜிம் ஜைதி புதன்கிழமை (மார்ச், 22) இரவு 11 மணியளவில் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.அதில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை யாருக்கும் இல்லை என அறிவித்து அச்சின்னத்தை முடக்கி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதில் சர்ச்சை நீடிப்பதால் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாகவும், கட்சியின் சின்னத்தையோ, கட்சியின் பெயரையோ இருதரப்பினரும் எங்கும் பயன்படுத்தக்கூடாது என்று கூறியுள்ளது.மேலும் இரட்டை இலை சின்னம் முடக்கம் என்பது இடைக்கால உத்தரவுதான்.