June 10, 2017 தண்டோரா குழு
சென்னை சேப்பாக்கத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்,வறட்சி நிவாரணம், பயிர் கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் தில்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் 41 நாட்கள் அரைநிர்வானம் போராட்டம் மேற்கொண்டனர்.
இந்த போராட்டத்தை தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் விவசாயிகளை சந்தித்தனர்.
இதனிடையே விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார். இதனால் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெற்றப்பட்டது.
இந்நிலையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததை கண்டித்தும், கோரிக்களை நிறைவேற்றக் கோரியும் தென்னக நதிகள் இணைப்பு விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் நேற்று முதல் சென்னை சேப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் போராடி வரும் அவர்கள் 32 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.