கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுக்கா காவல் நிலைய பகுதியில் வசிக்கும் சபரீஸ்வரன் (29) என்பவர் அவரது இரண்டு சக்கர வாகனத்தை 08.11.2024-ம் தேதி இரவு வீட்டின் முன் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.மறுநாள் காலை வந்து பார்க்கும் போது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை காணவில்லை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.மேற்படி வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,உத்தரவிட்டதன் பேரில், பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது மேற்படி திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளான திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கவிராஜ் (20), வெங்கடேசன் மகன் துணைவன் என்ற ஆகாஷ் (21)மகேந்திரன் மகன் சிவ சஞ்சய் (21) மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கஜேந்திரன் மகன் யுகப்பிரதீப் (20) ஆகியோர்களை கைது செய்து மேற்படி வழக்கின் சொத்தான இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
ஆகாஷ் நிறுவனம் சார்பாக ஜே.இ.இ. தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆகாஷ் இன்விக்டஸ் எனும் புதிய பாடத்திட்டம் கோவையில் அறிமுகம்
கோவையில் சூயஸ் இந்தியா சார்பில் புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம்
தேசிய சைக்கிள் போட்டியில் தங்கப்பதக்கதை தட்டி சென்ற கோவை மாணவி!
துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு – சங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் சாதனை
பாஷ் சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளை மூலமாக மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பயனாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டன
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலா துறைக்கு முக்கிய பங்கு – இந்திய வர்த்தக சபை கோவை கிளை தலைவர் ராஜேஷ் லுந்த்