April 12, 2016
nbcnews.com
அமெரிக்க நாட்டில் உள்ள மத்திய மேற்கு மாநிலமான கன்சாஸ்யில் இரண்டு வயது நிரம்பிய ஒரு சிறுவனின் தொண்டையில் இருந்து ஆக்டோபஸ்சை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.
இதையடுத்து அந்தக் குழந்தையின் தாயின் காதலன் கைது செய்யப்பட்டுள்ளான். அது குறித்து காவல்துறையினர் கூறும்போது,
இரவு சுமார் 9:30 மணி அளவில் அந்தச் சிறுவனின் தாய் அவளுடைய காதலன் மூச்சு விட முடியாத சிறுவனுக்கு இதய இயக்க மீட்பு சிகிச்சை தருவதைப் பார்த்துள்ளார். இதையடுத்து சிறுவனை உடனே மருத்துவமனையில் சேர்த்து அவனுடைய தொண்டையில் உள்ள அடைப்பை வெளியே எடுத்தனர்.
மருத்துவர்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் அதிர்ச்சியூட்டும் வகையில் அவனுடைய தொண்டையில் இருந்து அக்டோபஸ் ஒன்றை வெளியே எடுத்தனர். அந்த அக்டோபஸ் சுஷி உணவைத் தயாரிக்க உதவும் எனத் தெரிவித்த மருத்துவர்கள். அது குழந்தையின் தொண்டையில் எப்படி வந்தது என்று தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவன் மிகவும் சிறிய வயது என்பதால் அவன் குறித்த எந்த அடையாளங்களையும் வெளிப்படுத்தவில்லை.