March 16, 2025
தண்டோரா குழு
இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 21 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது.2022-2023ஆம் கல்வியாண்டில் தேர்ச்சிபெற்ற மாணவ,மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
இப்பட்டமளிப்பு விழாவில் இளங்கலை மற்றும் முதுகலை வணிகவியல்த்துறை , இளங்கலை மற்றும் முதுகலை மேலாண்மைத்துறை,ஆங்கிலத்துறை ,கணிதத்துறை,கணினித்துறை , ஆடைவடிவமைப்புத்துறை,காட்சித் தொடர்பியல்த்துறை ஆகிய துறைகள் சார்ந்த சுமார் 1,365 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு பட்டம் பெற்றார்கள்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக T. Pragadeesan இணை இயக்குநர் EY GDS – கோயமுத்தூர், Hari V P Rao, இயக்குநா Talent Acquisition அனாலெக்ட் இந்தியா- ஆம்னிகாம் மீடியா குழம நிறுவனம் , கோயமுத்தூர் கலந்து கொண்டு கூறுகையில மாணவர்கள் திறன்களை வளர்த்து கொண்டு உயர்நிலையில் அடைத்தல் என்பது அவசியம் ஆகும். முன்னேற்றச் சிந்தனைகள் ஒவ்வொரு நாளும் வேண்டும்.
தொழில் சார்ந்த அறிவுரைகளை பெறுவது மட்டும்மல்ல தொழில் திறன்களை வளர்த்திக் கொள்ள வேண்டும்.கல்வியின் வேலைவாய்ப்பு அதிகரித்தல், தனித்திறன் வளர்த்துக் கொள்ளல்,தகவல் அமைப்பு திறன் மேம்பாடு மற்றும் பெருநிறுவன உலகில் வளர்ந்து வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்துதல்,ஆகியச் செய்திகள் கொண்டு உரையாடினார்கள்.
மாணவ,மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி கௌரவித்தார்கள்.இரத்தினம் கல்விக்குழமத்தின் தலைவர் மதன் ஆ.செந்தில் மற்றும் இயக்குநர் ஷீமா செந்தில் தலைமையேற்றார்கள்.முதன்மை நிர்வாகி மற்றும் செயலாளர் முனைவர் ஆர்.மாணிக்கம் மாணவர்களின் கல்வியின் அவசியத்தையும்,கல்லூரியில் கல்வி கற்ற மாணவர்கள் உயர் நிலையில் உள்ளார்கள்.
கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான கல்வி தரத்தை அளித்து வருகிறது என்று தன் வாழ்த்துரையில் கூறினார்.கல்லூரி முதல்வர் சி.பாலசுப்பிரமணியன் அனைத்துதுறை சார்ந்த மாணவ, மாணவிகள் பட்டங்கள் பெறுவது குறித்தும் மாணவர்களின் கல்வி கற்ற திறனையும் எடுத்துரைத்து வாழ்த்துக்களை கூறினார்.
துணைமுதல்வர் சி.ந.சுரேஷ் தேர்வுகட்டுப்பாட்டு அதிகாரி Dr S. தினகரன்,ஆய்வுத்துறை புல முதன்மையர் K.P.V சபரிஷ் மற்றும் வணிகவியல்த்துறை புல முதன்மையர் T.M ஹேமலதா மற்றும் அனைத்துறை சார்ந்த துறைத்தலைவர்கள் , பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தேர்வுகட்டுப்பாட்டு அதிகாரி Dr.S.தினகரன் சிறப்பாகச் செய்தார்.